Skip to main content

2019 முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை: முதல்வர் அறிவிப்பு!

Published on 05/06/2018 | Edited on 05/06/2018
plastic


2019-ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2019-ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு, மற்றும் தயாரிப்பிற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்தார்.

பால் பாக்கெட், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்களுக்கு மட்டும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தலாம் என்றும் பொதுமக்களும், வியாபாரிகளும் இதற்கு ஒத்துழைக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிளாஸ்டிக் பொருட்கள் மனித உயிருக்கும், சுகாதாரத்திற்கும் தீங்கு விளைவிக்கின்றன. பிளாஸ்டிக் பொருட்கள் எரிக்கப்படும் போது வெளிப்படும் நச்சுக் காற்றால் சுவாசிப்பதில் பிரச்னை ஏற்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்