Skip to main content

ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு கரோனா!

Published on 08/05/2020 | Edited on 08/05/2020

 

 Ariyalur


அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கரைவெட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் புதன் கிழமை இரவு 1.30 மணியளவில் கிராமத்திற்குத் தனது சொந்த வேலைக்காக ஊர் திரும்பி இருந்தார். இந்நிலையில் அவருக்குக் கரோனா பரிசோதனை 2 தினங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டு நேற்று அவருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து ஆம்புலன்ஸ் மூலமாக அரியலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். 
 

இந்நிலையில் கரைவெட்டி கிராம மக்கள் தங்களது பகுதிகளில் கரோனா தொற்று வந்திருக்குமோ என்ற பதற்றத்தில் உள்ளனர். மேலும் அவர் யாருடன் பழகினார் என்பதனை ஆய்வு செய்து பொதுமக்களின் அச்சத்தைப் போக்க வேண்டியது தமிழக அரசின் கடமை எனப் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டவர்களும் பொதுமக்களுடன் சகஜமாகப் பழகியும் நடமாடியும் வருகிறார்கள். அவர்கள் இல்லத்திலேயே இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர். 


 

சார்ந்த செய்திகள்