Skip to main content

உடல்நிலை சரியில்லாததால் சிறப்புப் பூஜை; இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 14/05/2024 | Edited on 14/05/2024
old man robbed 9 pounds of jewelry and 66 thousand while claiming to be doing pooja

ஈரோடு வி.வி.சி.ஆர் நகர் முதல் விதியைச் சேர்ந்தவர் சண்முகம்(72). இவரது மனைவி செல்வி (62). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி ஒருவர் கோவையிலும், மற்றொருவர் பள்ளிபாளையத்திலும் தனியாக வாசித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சண்முகம் மற்றும் செல்விக்கு அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் இருந்துள்ளது. இதுகுறித்து அவர்கள் அதே பகுதியில் உள்ள தெரிந்த பெண்ணிடம் கூறியுள்ளனர். அதற்கு அந்தப் பெண் கருங்கல்பாளையத்தில் தனக்கு தெரிந்த நபர் உள்ளார். அவர் உங்கள் உடல்நிலையை சரி செய்து விடுவார் என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சண்முகம், செல்வி கருங்கல்பாளையம் சென்று அந்த நபரை சந்தித்துள்ளனர். அப்போது அந்த நபர் பூஜை செய்தால் உங்களுக்கு சரியாகிவிடும் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த நபர் நேற்று முன்தினம் செல்வி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அந்த நபர் ஊமத்தங்காய்யை உடைத்து அதன் விதையை பாலில் கலந்து செல்வி மற்றும் சண்முகத்துக்கு கொடுத்துள்ளார். அதைக் குடித்த இருவரும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து விட்டனர். அதன் பிறகு நேற்று இருவரும் எழுந்து உடல்நிலை சரியில்லை என்று பள்ளிபாளையத்தில் உள்ள மகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவரும் ஈரோட்டில் வீட்டுக்கு வந்து தாய், தந்தை இருவரையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளார்.

இந்நிலையில் அவரது மகள் வீட்டுக்கு வந்த போது பீரோ திறக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  செல்வி வீட்டுக்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 9 பவுன் நகைகள், மற்றும் ரூ.66 ஆயிரம் ரொக்கம் ஆகியவை மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார். இதுகுறித்து அவரது மகள், தாயிடம் கேட்டபோது அவர் நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளார். இதை அடுத்து செல்வி ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் செய்தார். இதை அடுத்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது அந்த நபர் கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த பெருமாள் (60) எனத் தெரிய வந்தது.

தற்போது வந்த நபர் சங்ககிரியில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்தடவுன் போலீசார் சங்ககிரி சென்று பெருமாளை கைது செய்து அழைத்து வந்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோட்டில் நூதன முறையில் நகை, பணத்தைத் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஒரே நேரத்தில் 50 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் விசாரணை

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
Bomb threat to 50 hospitals simultaneously; Police investigation

மும்பையில் 50 மருத்துவமனைகளுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏற்கனவே இந்தியாவில் உள்ள 50 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் காவல்துறை விசாரணையில் அவை அனைத்தும் புரளி என தெரிய வந்தது. இந்தநிலையில் தற்போது மும்பையில் 50க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு ஒரே நேரத்தில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஜஸ்லோக், ரஹேஜா, செவன் ஹில் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு ஈமெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. முதற்கட்ட தகவல் படி மருத்துவமனையின் படுக்கைகள், குளியலறைகளில் வெடிகுண்டு உள்ளதாக சைப்ரஸ் நாட்டிலிருந்து வெடிகுண்டு விரட்டில் வந்திருப்பதாகவும், மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் குறித்து விசாரித்து வருவதாகவும் மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.

Next Story

பக்கெட்டுக்குள் தவறி விழுந்து 9 மாத குழந்தை உயிரிழப்பு

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
A 9-month-old baby lose their live after falling into a bucket

கோபிசெட்டிபாளையம் அருகே தண்ணீர் பக்கெட்டுக்குள் தவறி விழுந்து 9 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பீம்(35). இவரது மனைவி ரீமா(32). இவர்களுக்கு ரோஷினி, ரட்சனா, ராணி, அமித் மற்றும் ராசி (9 மாத கைக்குழந்தை) இருந்தனர். இவர்கள் அனைவரும் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கெட்டிசெவியூர், பள்ளிபாளையத்தில் உள்ள தனியார் மில் குடியிருப்பில் தங்கி கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை கணவர் பீம் பால் வாங்குவதற்காக வெளியே சென்றுவிட்டார். வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் மட்டும் இருந்துள்ளனர். அப்போது துணிகளை துவைப்பதற்காக மனைவி ரீமா பிளாஸ்டிக் பக்கெட்டில் தண்ணீருடன் சோப்பு பவுடரை கலந்து வைத்துவிட்டு வீட்டிற்குள் சமையல் வேலை செய்து கொண்டிருந்தார். குழந்தை ராசி வீட்டிற்கு வெளியே இருந்துள்ளது. பின்னர் சமையல் வேலையை முடித்து விட்டு ரீமா வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தார்.  அப்போது குழந்தை ராசி சோப்பு தண்ணீர் பக்கெட்டிற்குள் தலைகீழாக விழுந்து கிடந்தது தெரியவந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரீமா ஓடிச் சென்று  குழந்தையை தூக்கிய போது குழந்தை பேச்சு மூச்சு இன்றி இருந்தது. பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியோடு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபிசெட்டிபாளையம்  அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.