Skip to main content

“400 கோடி திமுகவிடம் வாங்கியவர் 4 ரூபாய் கூட என்னிடம் வாங்காமல் நாடு முழுவதும் தெரியப்படுத்தியுள்ளார்” - சீமான்

Published on 15/03/2023 | Edited on 15/03/2023

 

Seeman replied to Prashant Kishore's tweet

 

பிரபல தேர்தல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் வடமாநிலத் தொழிலாளர்கள் விவகாரத்தில் சீமான் பேசிய காணொளி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த காணொளியில் சீமான், “நான் ஆட்சிக்கு வந்த ஒரு வாரத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் அனைவரும் பெட்டியைக் கட்டிக்கொண்டு போய்விடுவார்கள். எத்தனை பேரை எங்கு வச்சி வெளுப்பேன் என்று தெரியாது. கஞ்சா வைத்திருந்தார்கள், பாலியல் தொல்லை போன்ற வழக்குகளில் ஆயிரம் பேரை உள்ளே தூக்கிப்போட்டு அவர்களுக்கு சோறு போடாதீர்கள் என்று கூறி உள்ளே வைத்து பிச்சிவிட்டேன் என்றால் அவர்களாகவே தமிழ்நாட்டை விட்டுக் கிளம்பி விடுவார்கள்” எனக் கூறியிருந்தார். பிரசாந்த் கிஷோர் பகிர்ந்த காணொளி சமூக வலைதளங்களில் பேசு பொருளானது. தொடர்ந்து சீமான் மீது 153(B)(c), 505(1)(c), 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

இந்நிலையில், நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் என்.எல்.சி நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “வட இந்தியர்கள், இந்திக்காரர்கள் அதிகமாக தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள். அதை முறைப்படுத்துங்கள் என்று தான் நான் பேசினேன். பிரசாந்த் உங்களை நான் பாராட்டுகிறேன். நீங்கள் பீகாரி. பீகாரிக்கு உண்மையாக இருக்கிறீர்கள். நான் தமிழன். அதுபோல் என் இனத்திற்கு உண்மையாக இருக்கிறேன். நீங்கள் இப்படிப் பேசினால் கர்நாடகத்தில் இருக்கும் தமிழர்களை, ஆந்திராவில் இருக்கும் தமிழர்களை அடித்தால் என்ன செய்வீர்கள் எனக் கேட்பார்கள். அவர்கள் இதற்கு முன் அடித்தபோது என்ன செய்தீர்கள்? என்னை அச்சுறுத்தாதீர்கள். நீங்கள் தொட்டால் நானும் தொடுவேன். 

 

அவர்கள் ஒன்றேகால் கோடி பேருக்கும் மேல் இங்கு குடிபெயர்ந்துள்ளார்கள். நாம் சிறுக சிறுக நம் வேலைவாய்ப்பை இழப்பது மட்டுமல்ல. இன்று கூலியாக உள்ளவர்கள் நாளைய முதலாளியாக மாறுவார்கள். நிலம் அவர்கள் கையில் போகும். நாம் நிலமற்ற அடிமைகளாவோம். இவை அனைத்தும் வரலாற்றெங்கிலும் நிகழ்ந்துள்ளது. அதை பார்க்கும்போது நமக்கு பயம் வருகிறது. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நினைக்கிறோம்.

 

வட இந்தியர்கள் வருகையை முறைப்படுத்துங்கள். அப்பொழுதுதான் அவர்களைக் கண்காணிக்க முடியும். நேற்று மீனவர்கள் கைதான போது, வயிற்றுப்பசிக்கு தானே வந்தார்கள், ஏன் கைது செய்தீர்கள் என யாரும் கேட்கவில்லையே. நான் அடிவாங்கும் பொழுது நன்முறையாக உள்ளது, மற்றவர்கள் அடிவாங்கும் போது உங்களுக்கு ஏன் வன்முறையாகத் தெரிகிறது. உடனே வன்முறையைத் தூண்டுகிறார். இரு இனங்கள் இடையே பகையைத் தூண்டுகிறார் என வழக்கு போடுகிறார்கள். ரூ. 400 கோடி வாங்கிவிட்டு திமுகவிற்கு வேலை செய்தவர் எனக்கு 4 ரூபாய் கூட வாங்காமல் இந்தியா முழுவதும் சீமான் என்ற ஒருவர் இருக்கிறார் எனத் தெரியப்படுத்தியுள்ளார். இதற்காகவே பிரசாந்த் கிஷோருக்கு நன்றி சொல்ல வேண்டும்.” எனப் பேசியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சின்னம் கிடைக்காதவர்கள் பொறாமையில் பேசுகிறார்கள்' - ஜி.கே. வாசன் பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
'Those who don't get the symbol speak in envy'-GK Vasan Answer

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த கரும்பு விவசாயி சின்னத்திற்குப் பதிலாக மைக் சின்னம் கொடுக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சின்னம் தொடர்பான பிரச்சனையில் மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் சிக்கின. மதிமுக பம்பரம் சின்னம் கேட்ட நிலையில், தேர்தல் ஆணையம் அச்சின்னத்தை தர முடியாது எனத் தெரிவித்திருந்தது. அதேபோல் விசிகவும் பானை சின்னம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

அண்மையில் புதிய சின்னமான மைக் சின்னத்தை அறிமுகப்படுத்திய நாம் தமிழர் கட்சியின் சீமான், ''தங்களுடைய கட்சிக்கு மட்டுமல்லாது மதிமுகவிற்கும் சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் சுணக்கம் காட்டுகிறது. இரண்டு தொகுதியில் போட்டியிட்டால் தான் கேட்கும் சின்னம் கொடுக்கப்படும் எனச் சொல்கிறது. அப்படி பார்த்தால் விசிக இரண்டு தொகுதிகளில் தானே போட்டியிடுகிறது அவர்களுக்காவது  கேட்கும் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்க வேண்டும். இதே பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக ஆகிய கட்சிகளுக்கு கேட்கும் சின்னம் கிடைத்துள்ளது. பாஜக கூட்டணியில் இருந்தால் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும்'' எனத் தெரிவித்திருந்தார்.

nn

இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''சில கட்சிகளுக்கு சின்னங்கள் கிடைக்கவில்லை என்று அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பொறாமையோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றமே ஒரு தெளிவான உத்தரவை கொடுத்திருக்கிறது. முறையாக கணக்கு வழக்குகளை கொடுத்தால் உங்களுக்கு சின்னம் கிடைக்கும். அதை சரிவர செய்யாமல் எங்களுக்கு எங்களுடைய சின்னம் வேண்டும் என்று கேட்டால் சட்டத்திலேயே அதற்கு இடம் கிடையாது. தேர்தல் ஆணையம் நினைத்தவர்களுக்கு நினைத்ததை கொடுக்க முடியாது. அதற்கான அதிகாரம் அவர்களுக்கு இந்தியாவில் கிடையாது. நம்முடைய சின்னம் முக்கியம் என்றால் சின்னத்திற்கு ஏற்ற அரசியல் கட்சிகள் தங்களுடைய கோட்பாடுகளை முறையாக சரியாக செய்திருக்க வேண்டும். அது அவர்களுடைய கடமை'' என்றார்.

Next Story

'நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்' - அதிகாரப்பூர்வமாக அறிவித்த சீமான்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
'Mike symbol for Naam Tamilar Party'-Seeman official announcement

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் நிலையில், சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருந்தது. சின்னம் உறுதியாகும் முன்னரே 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தி இருந்தார். குறிப்பாக நாம் தமிழர் கட்சியில் கிருஷ்ணகிரி தொகுதியில் வீரப்பன் மகள் வித்யா ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி (mike) சின்னம் ஒதுக்கப்பட்டதை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய சீமான், ''மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பாக செயல்படவில்லை. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒலிவாங்கி ( MIKE) சின்னத்தில் போட்டியிடும். நாம் தமிழர் எப்படி 7 விழுக்காடு வாக்கை பெற்றது என்பதுதான் எல்லோருக்கும் வியப்பு. இந்த தேர்தலில் என்ன நடக்கும் என ஜூன் 4 ஆம் தேதி பார்ப்போம்'' என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் மதிமுக போல விசிகவும் பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, ''மதிமுக, விசிக, பாஜக கூட்டணியில் இல்லை அதனால் சின்னம் கிடைக்கவில்லை. பாஜக கூட்டணியில் உள்ளதால் அமமுக டி.டி.வி. தினகரனுக்கு குக்கர் சின்னமும், த.மா.கா. ஜி.கே. வாசனுக்கு சைக்கிள் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக உடன் கூட்டணி வைத்திருந்தால் நாங்கள் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும். ஒரு தொகுதியில் போட்டியிட்டால் பம்பரம் சின்னம் இல்லை என்று சொல்கிறதே தேர்தல் ஆணையம், திருமாவளவன் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறாரே அவர் கேட்கும் சின்னத்தை கொடுங்களேன். அறம் சார்ந்து நில்லுங்க'' என்று பதிலளித்தார்.