சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவத்தை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், இன்று தமிழக பாஜக மகளிர் சார்பில் அணி போராட்டம் மதுரையில் பேரணி நடத்தினர். இந்த பேரணியில், பாஜக பிரமுகர் குஷ்பு கலந்துகொண்டார். தடையை மீறி பேரணியில் ஈடுபட்ட பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட குஷ்பு உள்ளிட்ட பாஜக மகளிர் அணியினரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். ஆட்டு மந்தை அருகே உள்ள மண்டபத்தில் பா.ஜ.கவினரை அடைந்திருந்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இந்த நிலையில், குஷ்பு உள்ளிட்ட பா.ஜ.க மகளிர் அணியினரை போலீசார் விடுவித்தனர். வெளியே வந்த குஷ்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “ஆடுகள் நிறைய இருந்த இடத்தில் தான் அடைத்து வைத்தார்கள்” என்று கூறி தனது காரில் சென்றார்.