மாதம் இருமுறையாவது சேலத்திற்கு விசிட் அடிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
சேலத்தின் மீதான எடப்பாடியின் அக்கறை குறித்து அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரிடம் பேச்சுக் கொடுத்தபோது, "சார்... சொந்தத் தொகுதியையாவது தன்னோட கோட்டையாக ஆக்கிக்கணும்னு அண்ணனுக்கு ஆசை" என சொல்லியபடி சுற்றும் முற்றும் பார்த்தவர், மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார்.
"இதுல இன்னொரு சங்கதியும் இருக்கு சார். அம்மாபேட்டையில் ஒரு மருத்துவமனை, ஸ்பின்னிங் மில், சூரமங்கலத்துல ஒரு ஹோட்டல்னு பினாமிகளின் சொத்து கூடிக்கிட்டே போகுது. அண்ணன் சேலத்துக்கு வந்தா ஒரு சொத்து கிரயம் ஆகுதுன்னு புரிஞ்சிக்கலாம். அதுலேயும் ஒரு கிளவர்னஸ் உண்டு. சொத்தோட லாபம் மட்டும் பினாமிகள் கணக்குக்கு வர்ற மாதிரி டெக்னிக்கை ஃபாலோ பண்றாங்க. மார்க்கெட் ரேட்டுக்குதான் எல்லா சொத்துகளையும் வாங்குறாங்க. திடீர்னு ஆட்சிமாற்றமோ, பா.ஜ.க. காலை வாரிவிட்டு ஐ.டி.ரெய்டோ வந்தால்கூட நேரடியா சிக்கிவிடக்கூடாதுன்னு அண்ணன் ஜாக்கிரதையா இருக்காரு" என்றார்.