Skip to main content

பி.இ., பி.டெக்., நேரடி 2ஆம் ஆண்டு சேர்க்கை; ஆக. 10 முதல் விண்ணப்பிக்கலாம்! 

Published on 07/08/2020 | Edited on 07/08/2020
addd


பி.இ., பி.டெக்., ஆகிய பொறியியல் படிப்புகளில் நேரடி இரண்டாம் சேர்க்கைக்கு வரும் 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.


டிப்ளமோ மற்றம் பி.எஸ்சி., நேரடியாக பி.இ., பி.டெக். பொறியியல் படிப்புகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்ந்து படிக்க முடியும். வரும் 10ஆம் தேதி முதல் இதற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 30.8.2020. விண்ணப்பங்களை www.accet.co.in / www.accetedu.in / www.accetlea.com  என்ற இணையத்தளத்தின் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். சான்றிதழ்களையும் இதே இணையத்தளங்களின் வாயிலாக பதிவேற்றம் செய்ய வேண்டும். 


விண்ணப்பத்திற்கான பதிவுக்கட்டணத்தை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் மூலமாக இணையத்தளம் வாயிலாக செலுத்தலாம். இணையத்தளம் மூலமாக பதிவுக்கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள், ''The Secretary, Second Year BE / B.Tech Degree Admission - 2020-21, ACGST, Karaikudi, payable at Karaikudi'' என்ற பெயரில் 10.8.2020 அன்றிலிருந்து பெறப்பட்ட வரைவோலையை (டிடி) பதிவுக்கட்டணமாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் (TFCs) வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.


எஸ்.சி., எஸ்.சி.(ஏ), எஸ்.டி. பிரிவினருக்கு பதிவுக்கட்டணம் கிடையாது. 


இணையத்தள வசதி இல்லாதவர்கள், விண்ணப்பித்தல், வரைவோலை செலுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையத்தினை (டி.ஃஎப்.சி) பயன்படுத்திக் கொள்ளலாம். முன்னெச்சரிக்கையாக அனைத்து டி.ஃஎப்.சி. மையங்களிலும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. 


நடப்புக் கல்வி ஆண்டில் பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கு நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான கலந்தாய்வும் இணையத்தளம் மூலம் மட்டுமே நடைபெறும். 


மேலும் விவரங்களுக்கு www.accet.co.in / www.accetedu.in / www.accetlea.com என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். அல்லது, 044-22351014, 22351015 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


இவ்வாறு தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஒரே நாளில் 23 ஆயிரம் பேர் விண்ணப்பம்... பி.இ., அட்மிஷன் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு!

Published on 17/07/2020 | Edited on 17/07/2020

 

 Admission

 

ப்ளஸ் 2 சி.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் கடந்த 13ஆம் தேதி வெளியானது. இதனைத் தொடர்ந்து ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு தொடங்கியது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 16-ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்காக நேற்றுமட்டும் ஆன்லைனில் 23 ஆயிரத்து 583 பேர் விண்ணப்பித்து இருப்பதாகவும், இதில் 11 ஆயிரத்து 121 பேர் விண்ணப்பத்துக்கான கட்டணத்தைச் செலுத்திவிட்டதாகவும் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை அலுவலகம் தெரிவித்து இருக்கிறது. 

 

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், இனிவரக்கூடிய நாட்களில் மாணவ-மாணவிகள் பலரும் என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டைவிட அதிகரிக்கும் என்று உயர்கல்வித் துறை எதிபார்த்து இருக்கிறது.

 

 

 

Next Story

கையை பிளேடால் அறுத்தும் காதலன் கண்டுகொள்ளவில்லை - எலி மருந்து சாப்பிட்டு மாணவி தற்கொலை

Published on 13/09/2018 | Edited on 13/09/2018
suicide



திருமணம் செய்து கொள்ள காதலன் மறுத்ததால் கல்லூரி மாணவி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 

மதுரை மாவட்டம், திருவாதவூரைச் சேர்ந்த சிந்துஜா தனியார் கல்லூரி ஒன்றில் பி.இ., இறுதி ஆண்டு படித்து வந்தார். +2 தேர்வு முடிந்தவுடன் நுழைவுத் தேர்வுக்காக பயிற்சிக்கு சென்றபோது சிவகாசியை அடுத்த திருத்தங்கலைச் சேர்ந்த ராம்குமார் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. ஒரு மாதம் பயிற்சி முடிவதற்குள்ளாகவே இவர்களின் நட்பு காதலாக மாறியது. 
 

இருவரும் வெவ்வேறு கல்லூரிகளில் பி.இ. படிப்புக்கு சேர்ந்தனர். படிப்பதாக கூறி கடந்த 4 வருடங்களாக மதுரையில் பல இடங்களில் இவர்கள் இருவரும் சுற்றியுள்ளனர். மேலும் வாட்ஸ் அப் மற்றும் முகநூலிலும் இவர்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர். இதேபோல் டப்மாசிலும், டிக்டாக் மியூசிக்கல் ஆப்பிலும் தங்களது புகைப்படங்களை பரிமாறிக்கொண்டனர்.
 

இவர்கள் காதலிப்பதும், மதுரையில் பல இடங்களில் சுற்றியிருப்பதும் ராம்குமார் வீட்டுக்கு தெரிய வந்துள்ளது. ராம்குமார் தாயார் விருப்பப்படி சிந்துஜாவை வீட்டிற்கும் அழைத்துச் சென்றுள்ளார். 
 

சிந்துஜா வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்றாலும், அவரை பிடித்துவிட்டதால் ராம்குமார் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. 

 

Ram



இதனைத் தொடர்ந்து ஆடி மாதம் முதல் நாள் சிந்துஜாவின் வீட்டிற்கு வருவதாக ராம்குமார் வீட்டில் தெரிவித்திருந்தனர். இதனை சிந்துஜா தனது வீட்டில் தெரிவித்திருந்தார். அவர்களும் ராம்குமார் குடும்பத்தினரை வரவேற்க தயாராக இருந்தனர். அதன்படி சிந்துஜா வீட்டிற்கு சென்று முறைப்படி பெண் கேட்க ராம்குமார் குடும்பத்தினர் சென்றனர். 
 

திருவாதவூரில் சிந்துஜாவின் குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் இருப்பதை பார்த்தும் ராம்குமார் குடும்பத்தினர் சரியாக பேசவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் வந்த உடனேயே ராம்குமார் குடும்பத்தினர் அவசர அவசரமாக திரும்பினர். அதன் பின்னர் சிந்துஜாவிடம் ராம்குமாரை பேசவிடாமல் அவரது பெற்றோர் தடுத்ததாக கூறப்படுகிறது. 
 

ராம்குமார் பேசுவதை குறைத்துக்கொண்டவுடன், சிந்துஜா அவரை தொடர்பு கொண்டிருக்கிறார். அப்போது அவரை தூக்கி எறியும் விதத்தில் பேசியிருக்கிறார் ராம்குமார். 
 

இதனைத் தொடர்ந்து தனது கையில் பிளேடால் அறுத்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி படம் எடுத்து அதனை வாட்ஸ் ஆப்பில் அனுப்பி வைத்துள்ளார். 
 

ராம்குமாரிடம் இருந்து எந்த பதிலும் வராததால் கடந்த 31ஆம் தேதி பேரீச்சம் பழத்தில் எலிமருந்தை கலந்து சாப்பிட்டுள்ளார். இதையடுத்து அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 
 

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிந்துஜா அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னதாக மாஜிஸ்திரேட்டிடம் மரண வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், தனது தற்கொலை முடிவுக்கு தனது காதலன் ராம்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர்தான் என்று தெரிவித்துள்ளார். 
 

சிந்துஜா உயிரிழந்ததும் தகவலை சொல்லியும், ராம்குமார் வீட்டில் இருந்து யாரும் வரவில்லை என்றும், சிந்துஜா உயிரிழந்ததற்கு ராம்குமார் குடும்பம்தான் காரணம் என்றும்,  சிந்துஜா குடும்பத்தினர் கூறினர்.