திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை புறக்கணிப்போம் என நகர்ப்பகுதி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நிலக்கோட்டை ஒன்றிய அதிமுக தேவேந்திரகுல வேளாளர் என்ற அமைப்பு சார்பில் கண்டன போஸ்டர்கள் நகர் பகுதியில் ஒட்டப்பட்டுள்ளன. அதில் தேவேந்திரகுல வேளாளர்கள் என அரசாணை வெளியிடுவோம் என வாக்குறுதி அளித்துவிட்டு தற்போதுவரை அதனை அறிவிக்காமல் ஏமாற்றி வரும் அதிமுகவை கண்டித்தும், நிலக்கோட்டை ஒன்றியத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு ஒன்றிய பதவி வழங்காமல் புறக்கணித்ததை கண்டித்தும் தங்களை நம்ப வைத்து ஏமாற்றியதாக கூறி வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என அந்த சுவரொட்டியில் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. இது நகர்ப்பகுதி மற்றும் கிராமபகுதிகல் முழுவதும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் நிலக்கோட்டை தொகுதியில் உள்ள அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.