Skip to main content

ஐக்கியமாக மறுத்த கோவா கட்சி; செயல்தலைவரை இழுத்த திரிணாமூல் காங்கிரஸ்!

Published on 20/11/2021 | Edited on 20/11/2021

 

TRINAMOOL CONGRESS

 

மேற்கு வங்கத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டுள்ள திரிணாமூல்காங்கிரஸ், தனது கிளைகளைப் பல்வேறு மாநிலங்களில் பலமாக நிறுவ முயற்சி மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், அடுத்தாண்டு தேர்தலை சந்திக்க கோவா மாநிலத்தையும் திரிணாமூல் குறிவைத்து வருகிறது.

 

இந்தச் சூழலில் அண்மையில் கோவாவில் சுற்றுப்பயணம் செய்த மம்தா பானர்ஜி, கோவா ஃபார்வேர்டு கட்சியின் தலைவர் விஜய் சர்தேசாயை சந்தித்து கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.

 

இந்தநிலையில் இன்று கோவா ஃபார்வர்ட் கட்சியின் செயல் தலைவர் கிரண் கண்டோல்கர், அக்கட்சியிலிருந்து விலகி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். அவரோடு கோவா ஃபார்வர்ட் கட்சியின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களும் திரிணாமூல் காங்கிரஸில் இணைந்துள்ளனர்.

 

மம்தா கோவாவிற்கு வருவதற்கு முன்பாக கோவா ஃபார்வேர்டு கட்சியின் தலைவர் விஜய் சர்தேசாய், தனது கட்சியை கோவா திரிணாமூல் கட்சியோடு இணைக்குமாறும், அவ்வாறு இணைத்தால் கோவா மாநில தலைவர் பொறுப்பு வழங்கப்படும் என பிரசாந்த் கிஷோர் தன்னிடம் கூறியதாகவும், ஆனால் தான் அதனை மறுத்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் அக்கட்சியின் துணை தலைவர்  திரிணாமூல் காங்கிரஸில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்