ghj

மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இடைவிடாதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். இந்த நிலையில் குடியரசுத் தினமானகடந்த 26ம் தேதி, ட்ராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்திருந்தனர். இதற்கு டெல்லி காவல்துறையும் அனுமதி அளித்திருந்தது.

Advertisment

இதில் ஏற்பட்ட வன்முறையில் விவசாயி ஒருவர் பலியானார். 500க்கும் மேற்பட்ட காவலர்கள் தாக்குதலில் காயம் அடைந்தனர். 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் கொளுத்தப்பட்டன. 30க்கும் மேற்பட்ட வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் கோபமான விவசாயிகள் அருகில் உள்ள மற்ற மாநிலங்கலில் இருந்து விவசாயிகளை டெல்லி நோக்கி அழைத்து வர பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனை தடுக்கும் நோக்கில் டெல்லி புறநகர் எல்லையில் இரண்டு நாட்களுக்கு இணைய சேவை முடக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.