
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இன்று (07.05.2025) நள்ளிரவு 01.44 மணி அளவில் நள்ளிரவில் இந்திய முப்படைகள் கூட்டாக இணைந்து அதிரடி ஏவுகணை தாக்கிதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில், 70 பயங்கரவாதி கொல்லப்பட்டதாகவும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
பகல்பூரில் ஜெய்ஷ் - இ - முகமது என்ற தீவிரவாத அமைப்பினுடைய முக்கிய பயிற்சி மையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அதன் தலைவர் மசூத் ஆசாத்தினுடைய வீடும் தாக்குதலுக்கு உள்ளானது. இதில் ஜெய்ஷி முகமது தீவிரவாத அமைப்பின் தலைவராகவும், இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக உள்ள மசூத் ஆசாத்தினுடைய குடும்பத்தினர் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இதேபோல் இந்தியாவால் பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த லஷ்கர் -இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் இருவர் இந்தியாவின் சிந்தூர் ஆபரேஷனில் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. லஷ்கர் -இ தொய்பா அமைப்பின் மூத்த தளபதிகளில் என அழைக்கப்படும் அப்துல் மாலிக் மற்றும் முடாசிர் ஆகியோர் இந்தியாவின் தாக்குதலில் பலியாகி உள்ளனர். பாகிஸ்தானில் உள்ள முர்டிகேவில் செயல்பட்டு வரும் இந்த அமைப்பின் பயிற்சி முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவரும் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை அடுத்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், உலகத்திற்கு ஒற்றை வரியில் மெசெஜ் கூறியுள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது, “இந்த உலகம் பயங்கரவாதத்தை ஒரு துளி கூட சகித்துக்கொள்ளக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.