Skip to main content

'உக்ரைனுக்கு அமைதி வேண்டும்; பசுமை இல்ல வாயுக்களை குறைக்க வேண்டும்'- ஜி20 மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றம்

Published on 09/09/2023 | Edited on 09/09/2023

 

bb

 

டெல்லியில் இன்றும், நாளையும் என இரு நாட்கள் டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். மாநாட்டில் கலந்துகொள்ள வருகை தந்த சர்வதேச தலைவர்களுக்குப் புகழ்பெற்ற கோனார்க் சக்கரம் பின்னணியில் இருக்கும்படி சிவப்புக் கம்பளத்தில் நின்று பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு அளித்தார். அதேபோன்று பிரகதி மைதானத்தின் முன்பு தமிழகத்தின் 27 அடி உயர நடராஜர் சிலை நிறுவப்பட்டுள்ளது.

 

மொரோக்கோ நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ஜி 20 மாநாட்டில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் நாட்டின் பெயரைக் குறிக்க பிரதமர் மோடியின் முன்பாக வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகையில் இந்தியா என்பதற்குப் பதிலாக ‘பாரத்’ என இடம்பெற்றது.

 

இந்த ஜி 20 மாநாட்டில் கூட்டறிக்கைக்கு உலக தலைவர்கள் ஒப்புதல் அளித்ததுள்ளனர். மேலும் பல்வேறு தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. உக்ரைன்-ரஷ்யா போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உக்ரைனில் அமைதி நீடித்தல், ஐநா சபையின் அனைத்து நோக்கங்கள், கொள்கைகள் நிலைநிறுத்துவதற்கான தீர்மானம். ஜி 20 உறுப்பு நாடுகளுக்கு இடையே வணிகம் செய்வதை எளிதாக்கவும் செலவைக் குறைப்பதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வணிகம் செய்வதை எளிதாக்க தனியார் துறையுடன் இணைந்து பணியாற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2030க்குள் பசுமை இல்ல வாயுக்கள் வெளியிடுதல் 43 சதவீதம் அளவுக்கு குறைக்க கவனம் செலுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அணு ஆயுதம் பயன்படுத்துவதையோ மற்றும் அணு ஆயுத தாக்குதல் தொடர்பாக மிரட்டுவதையோ ஏற்க முடியாது என பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கான முடிவுகள் எடுக்கும் இடத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொண்டு வர தீர்மானம். பாலின இடைவெளியைக் குறைத்து சமமான வாய்ப்புகளை வழங்கி பெண்களை ஊக்குவிக்கவும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்