Skip to main content

யு.ஜி.சி நெட் மறுதேர்வு தேதிகள் அறிவிப்பு!

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
UGC NET Re-exam Date announced

நாட்டின் பல்கலைக்கழகம், கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகையைப் பெறவும் யு.ஜி.சி நெட்(UGC NET) தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். ஆண்டுதோறும் தேசிய தேர்வுகள் முகமை(என்.டி.ஏ) சார்பில் இரண்டுமுறை நெட் தேர்வு நடைபெறுகிறது. 

அந்த வகையில் இந்தாண்டு நெட் தேர்வு முதற்கட்டமாக கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. 9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதிய நிலையில், இந்த தேர்வை ரத்து செய்து  மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டது. தேர்வு முறையின் வெளிப்படைத்தன்மை; புனிதத்தை உறுதி செய்யும் நோக்கில் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் கடந்த 25 முதல் 27 வரை நடக்கவிருந்த சி.எஸ்.ஐ.ஆர் யுஜிசி நெட்(CSIR UGC NET)தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. 

இந்த நிலையில்தான்  யு.ஜி.சி நெட் மற்றும் சி.எஸ்.ஐ.ஆர் யுஜிசி நெட் ஆகிய தேர்வு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  யு.ஜி.சி நெட் தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் 21 மற்றும் செப்டம்பர் 4 தேதிகளுக்கிடையே நடைபெறும். சி.எஸ்.ஐ.ஆர் யுஜிசி நெட் தேர்வு ஜூலை 25 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தேசிய தேர்வு முகமையை மேம்படுத்தக் குழு!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Committee to improve the National testin Agency

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

அதே சமயம் யுஜிசி நெட் ஜூன் 2024 தேர்வை ரத்து செய்வதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. நெட் தேர்வில் முறைகேடு நடந்திருக்கலாம் எனத் தேசிய சைபர் கிரைமில் இருந்து யூஜிசிக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த இரு தேர்வுகளையும் நடத்தி வருவது தேசிய தேர்வு முகமை ஆகும்.

இந்நிலையில் வெளிப்படையான, சுமூகமான மற்றும் நியாயமான தேர்வுகளை நடத்துவதை உறுதி செய்வதற்காக மத்திய கல்வி அமைச்சகம் உயர்மட்ட நிபுணர் குழுவை அமைத்துள்ளது. தேர்வு செயல்முறையின் சீர்திருத்தம், தரவு பாதுகாப்பு நெறிமுறைகளில் முன்னேற்றம் மற்றும் தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடு ஆகியவை குறித்த பரிந்துரைகளை இந்த குழு 2 மாதங்களுக்குள் கல்வி அமைச்சகத்திடம் வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்மட்டக் குழுவின் தலைவராக இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை ஐஐடி பேராசிரியர் ராமமூர்த்தி உள்ளிட்ட 7 உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

Next Story

யுஜிசி நெட் தேர்வு ரத்து- மத்திய அரசு அறிவிப்பு

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
UGC NET Exam Cancellation - Central Govt Notification

யுஜிசி நெட் ஜூன் 2024 தேர்வை ரத்து செய்வதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

நடைபெற்ற யுஜிசி நெட் 2024 தேர்வில் முறைகேடு நடந்திருக்கலாம் என தேசிய சைபர் கிரைமில் இருந்து யூஜிசிக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தேர்வு முறையின் வெளிப்படைத்தன்மை; புனிதத்தை உறுதி செய்யும் நோக்கில் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு நகரங்களில் யுஜிசி நெட் 2004 தேர்வு நடைபெற்ற நிலையில் அரசு தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே மருத்துவ துறைக்கான  நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், யூஜிசி நெட் 2024  தேர்வவை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.