Skip to main content

புதுச்சேரியில் திருமுருகன் காந்தி கைதை கண்டித்து போராட்டம்...

Published on 13/08/2018 | Edited on 22/01/2019
th_gandhi

"தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் திருமுருகன் காந்தி பதிவு செய்துவிட்டு திரும்பிய போது, பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி படுகொலையை ஐ.நாவில் பேசியதற்காக பழைய போராட்ட வழக்குகளை காரணம் காட்டி திருமுருகன் காந்தியை பெங்களூரில் தமிழக காவல் துறையினர் கைது செய்தனர்.

 

விடுதலை புலிகள் மீதான தடையை நீக்ககோரி ஜெர்மனியில் உரையாற்றிய திருமுருகன் காந்தி, ஐ.நா.வில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் 8 வழிச்சாலை விவகாரங்கள் குறித்து பேசியதாக அவர் மீது தேசதுரோக வழக்கு நிலுவையில் உள்ளதால், அவர் எந்த விமான நிலையம் வந்தாலும் கைது செய்யும்படி லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக திருமுருகன் காந்தியை கைது செய்த போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

கடந்த ஆண்டு சிறையில் இருந்து வெளிவந்த திருமுருகன் காந்தி ராயபேட்டையில் உள்ள பெரியார் சிலைக்கு ஊர்வலமாக சென்று மாலை அணிவித்தார் என போலீசார் அவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் இவ்வழக்கில் புதிதாக 124a தேசதுரோக வழக்கினையும் 153 சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட புதிய வழக்குகள் பதிவு செய்து கைது செய்துள்ளனர். 

 

இந்நிலையில், திருமுருகன் காந்தி கைதை கண்டித்து புதுச்சேரியில் காமராஜர் சிலை அருகே மறியல் போராட்டம் நடந்து வருகிறது. திராவிடர் விடுதலை கழகத்தினர் 100க்கும் மேற்பட்டோர் நடத்தி வரும் மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்