Skip to main content

திடீர் வெள்ளம்; நான்கு வயது சிறுவனுடன் சிக்கிய தாய் மீட்பு

Published on 20/05/2024 | Edited on 20/05/2024
flash floods; Mother rescues trapped mother with four-year-old boy

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக கோடை மழை பொழிந்து வருகிறது. அதே சமயம் தமிழகத்தின் பல இடங்களில் கனமழையும் பொழிந்து வருகிறது.  இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக பரப்பு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் தாய் ஒருவர் நான்கு சிறுவனுடன் சிக்கிக்கொண்ட நிலையில் கயிறின் மூலம் அவர் மீட்கப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு மேலாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கொடைக்கானல் மூங்கில் காடு கிராமத்தில் பழங்குடியினர் உட்பட 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் பகுதியில் ஆற்றுப்பகுதியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கயிறு மூலம் அந்தபகுதி மக்கள் ஆற்றைக் கடந்து வந்தனர். இந்நிலையில் கிராமத்தில் வசித்து வரும் சௌந்தர்யா என்ற பெண் தன்னுடைய நான்கு வயது மகனுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு செல்வதற்காக ஆற்றைக் கடந்து சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வர முடியாமல் ஆபத்தில் சிக்கியவரை மீட்டு படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் கயிறு மூலம் பத்திரமாக அழைத்து வந்தனர்.

சார்ந்த செய்திகள்