Skip to main content

களங்கம் ஏற்படுத்தும் கட்டுரை... 5000 கோடி நஷ்டஈடு கேட்டு அனில் அம்பானி வழக்கு..

Published on 26/08/2018 | Edited on 26/08/2018

 

ANIL

 

 

 

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மோடி அரசு முறைகேடு செய்ததாக  காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டிவந்த நிலையில் காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் நடந்துவரும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் மீது ரூபாய் 5,000 கோடி கேட்டு அனில் அம்பானி வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

 

பிரான்ஸ் நாட்டுடன் போடப்பட்ட ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிர்ணயித்த தொகையை விட தற்போதைய பாஜக அரசு இரு மடங்கு உயர்த்தியுள்ளதாகவும் அதில் முறைகேடு நடந்திருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

 

இந்நிலையில் காங்கிரஸ் அறக்கட்டளையின் சார்பில் நடந்துவரும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளியிட்டுள்ள கட்டூரையில் தங்கள் நிறுவனத்திற்கு களங்கம் கற்பிக்கும்வகையில் அவதூறு கருத்துக்கள் கூறப்பட்டுள்ளது என அனில் அம்பானியின் ரிலைன்ஸ் டிபன்ஸ் நிறுவனம்  அகமதாபாத் சிவில் நடுவர் நீதிமன்றத்தில் ரூபாய் 5,000 கோடி நஷ்டஈடு கேட்டு அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளது.  

 

இதுகுறித்து பதில் மனு வரும் செப்டெம்பர் 7-ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்