Skip to main content

''ஆக்சிஜன் சிலிண்டர் வாகனங்களை மாநில அரசுகள் தடுக்கக்கூடாது'' - உள்துறை அமைச்சகம் உத்தரவு!

Published on 22/04/2021 | Edited on 22/04/2021

 

'' State governments should not stop oxygen cylinder vehicles '' - Home Ministry orders!

 

மாநிலங்களுக்கிடையே மருத்துவ சேவைக்காக ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களை எந்த மாநில அரசுகளும் தடுக்கக்கூடாது என  மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

 

இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டை விட கரோனா பரவும் வேகம் அதிகமாக உள்ளது. கரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நேற்று (21.04.20210) ஒரேநாளில் 3 லட்சத்து 14 ஆயிரத்து 835 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. ஒரேநாளில் மூன்று லட்சம் பேருக்கு கரோனா உறுதியாவது இந்தியாவில் இது முதல்முறையாகும். 

 

கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், உறவினர்களே அவற்றை தனியார் நிறுவனங்களில் இருந்து கொள்முதல் செய்து கொடுக்கின்றனர். அப்படியிருந்தும், பல இடங்களில் தட்டுப்பாடு இருப்பதால், ஒவ்வொருவரும் ‘மூச்சை’க் கையில் பிடித்துக் கொண்டு, உயிருக்குப் போராடி வருகின்றனர்.

 

இதனைத்தடுக்கும் விதமாக மாநிலம் விட்டு மாநிலம், மாவட்டம் விட்டு மாவட்டம், யூனியன் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாற்றப்பகுதிக்கு மருத்துவத் தேவைக்காக ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொண்டுசெல்லும் லாரி உள்ளிட்ட வாகனங்களை யாரும் தடுக்கக்கூடாது என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

 

நாடுமுழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவிவரும் நிலையில் இன்று மத்திய அரசின் உயர் அதிகாரிகளுடன் நடந்த கூட்டத்தில் நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்