Skip to main content

கஞ்சாவை தின்ற எலிகள் தற்பொழுது 1000 லிட்டர் மதுவையும் குடித்துவிட்டன; போலீசார் வினோத அறிக்கை

Published on 29/12/2018 | Edited on 29/12/2018

 

xgf

 

உத்திரபிரதேசத்தின் பரேலி கண்டோன்மென்ட் காவல்நிலையத்தின் சார்பில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட மதுபாட்டில்கள், கள்ளச்சாராயம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், அந்த மதுபாட்டில்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க போலீஸாருக்கு உயர் அதிகாரிகள் கடந்த வாரம் உத்தரவிட்டனர். இந்நிலையில் அங்கிருந்த மதுபானங்களை எலிகள் குடித்துவிட்டதால், அவற்றை ஒப்படைக்க முடியவில்லை என்று அந்த காவல்நிலையத்தில் உள்ள போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பரேலி எஸ்.பி. அபிநந்தன் சிங் கூறுகையில், 'பரேலி கன்டோன்மென்ட் போலீஸ் நிலையத்துக்குச் சமீபத்தில் நியமிக்கப்பட்ட போலீஸ் நரேஷ் பால், குடோனே திறந்துபார்த்தபோது, அனைத்து மதுபாட்டில்களும் காலியாகக் கிடந்துள்ளன, மது வைக்கப்பட்டிருந்த கேன்களும் காலியாக இருந்தன. சில எலிகளும் மதுபாட்டில்கள் அருகே இருந்ததை அவர் பார்த்துள்ளார். மேலும் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன்' எனத் தெரிவித்தார். ஏற்கனவே பிஹார் மாநிலத்திலும் மதுவை எலி குடித்துவிட்டதாக போலீஸார் தெரிவித்திருந்தனர், ஜார்கண்ட் போலீஸாரும் கஞ்சாவை எலி தின்றுவிட்டதாக கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 


 

சார்ந்த செய்திகள்