Skip to main content

“இதயம் தாண்டி இறைவன் இல்லை..” - கடல் கடந்து காதலியை கரம் பிடித்த தமிழர்

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

puducherry youngster marriage viral algeria woman 

 

புதுச்சேரியைச் சேர்ந்த கண்ணன் - நோயலின் என்ற தம்பதியரின் மகன் அபிலேஷ். இவர் கணினி பொறியியல் பாடத்தில்  பட்டம் பெற்றவர். அபிலேஷின் தந்தை இந்து, தாய் கிறிஸ்தவர். அபிலேஷ் தற்போது நெதர்லாந்து நாட்டில் கணினி பொறியாளராக வேலை செய்து வருகிறார். இவர் பணிபுரியும் இடத்தில் அல்ஜீரிய நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் பாத்திமா அப்பி  என்பவரும் பணிபுரிந்து வருகிறார். முதலில் நண்பர்களாக பழகி உள்ளனர். பின்னர் இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. மேலும் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர்.

 

இந்நிலையில் தங்கள் காதலை அபிலேஷும் பாத்திமாவும் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இவர்களின் காதலை இரு வீட்டாரும் ஏற்றுக்கொண்டனர். மேலும் சாதி, மதங்களைக் கடந்து இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் உறுதி எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து தங்களது திருமணமானது இருவீட்டார் சம்மதத்துடன் வள்ளலார் உருவாக்கிய சன்மார்க்க நெறிப்படி திருமணம் செய்துகொள்ள இருவரும் முடிவு செய்துள்ளனர்.

 

அதனைத் தொடர்ந்து புதுச்சேரி வந்த இவர்கள் திருக்குறளின் மீதும், வள்ளலாரின் திருமுறையின் மீதும் உறுதியேற்று திருமணம் செய்துகொண்டனர். இந்தத் திருமணம் வள்ளலார் சன்மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள், பெற்றோர்கள், உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவர்களின் இந்தத் திருமணம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story

'பாஜக காங்கிரஸ் பணம் தருகிறது' - தனி ஆளாக போராட்டத்தில் இறங்கிய சுயேச்சை வேட்பாளர்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'BJP Congress gives money' - Independent candidate goes into the struggle alone

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சியினர் வாக்குக்கு பணம் தருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர், சுயேச்சைகள் என மொத்தமாக 26 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர் மாஸ்கோ என்பவர் காங்கிரஸ் மற்றும் பாஜக நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பணம் தருவதாக புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக இரு கட்சி வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கருப்பு கொடியை ஏந்தியபடி சாலையின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.