Skip to main content

மத்திய அரசுக்கு எதிராகத் திரண்ட எதிர்க்கட்சிகள்!

Published on 06/03/2023 | Edited on 06/03/2023

 

opposition parties write letter to pm modi

 

பாஜக தலைமையிலான மத்திய அரசு தங்களுக்கு எதிராகச் செயல்படும் மாநில அரசுகளை அச்சுறுத்துவதற்காக மத்தியப் புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அரசு வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்தியப் புலனாய்வு அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறி பிரதமர் மோடிக்கு ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட ஒன்பது கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன.

 

அந்தக் கடிதத்தில், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் இருக்கும் ஆளுநர்களின் அணுகுமுறையால் ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருகிறது. அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை ஆகியன தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே மத்தியப் புலனாய்வு அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

இந்தக் கடித்ததில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், சமஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா (உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே, ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா ஆகிய 9 தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ஆனால், இந்தக் கடிதத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் இடம்பெறவில்லை. அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பலம் வாய்ந்த பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓர் அணியில் திரண்டால் மட்டுமே வீழ்த்த முடியும் என எதிர்க்கட்சித் தலைவர்களும் அரசியல் விமர்சகர்களும் கூறி வரும் நிலையில், இந்தக் கடிதத்தில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைவர்களின் பெயர்கள் இடம்பெறாதது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்