Skip to main content

16ம் தேதி முதல் அருங்காட்சியகங்கள், புராதன சின்னங்கள் திறக்கப்படும் - தொல்லியல் துறை அறிவிப்பு!

Published on 14/06/2021 | Edited on 14/06/2021
cvb


கரோனா பாதிப்பு இந்தியாவில் படிப்படியாகக் குறைந்து வருகிறது. கடந்த மாதம் 4 லட்சத்துக்கும் அதிகமாக இருந்த தினசரி கரோனா பாதிப்பு தற்போது 70 ஆயிரமாகக் குறைந்துள்ளது. இதனால் பல மாநிலங்களில் நடைமுறையில் இருந்த ஊரடங்கில், பல்வேறு தளர்வுகளை அந்தந்த மாநிலங்கள் அறிவித்து வருகின்றன. கரோனா தடுப்பு நடவடிக்கியின் ஒரு பகுதியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அருங்காட்சியகங்கள், புராதன சின்னங்கள் அனைத்தும் கடந்த  ஒரு மாதத்திற்கும் மேலாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது கரோனா பாதிப்பு சற்றே குறைந்துள்ள நிலையில், வரும் 16ம் தேதி முதல் அருங்காட்சியகங்கள் மற்றும் புராதன சின்னங்கள் நாடு முழுவதும் திறக்கப்படும் என்று மத்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்