
இ.ஓ.எஸ் -09 செயற்கைகளை விண்ணில் செலுத்தும் திட்டமான பிஎஸ்எல்வி சி-61 திட்டம் தோல்வியடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-61 என்ற செயற்கைக்கோள் இன்று (18-05-25) காலை 5:59 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. பிஎஸ்எல்வி சி-61 செயற்கை கோள் மூலம் இ.ஓ.எஸ்-09 எனும் அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிறுத்துவதற்காக இந்த செயற்கைக்கோள் அனுப்பப்பட்டது. ஆனால், இந்த திட்டம் தோல்வி அடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இது குறித்து இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளதாவது, ‘4 கட்டங்களாக ராக்கெட் செலுத்தப்படும் நிலையில், 3ஆவது அடுக்கு பிரிந்தபோது பிஎஸெல்வி சி61 ராக்கெட் திட்டம் தோல்வியடைந்துள்ளது’ எனத் தெரிவித்தார்.
232 வது கிலோமீட்டர் தொலைவில் ராக்கெட் சென்று கொண்டிருக்கும் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் சரியான பாதையில் பயணிக்க முடியவில்லை என்று முதற்கட்டமாக தகவல் வெளியாகியுள்ளது