Skip to main content

இந்திய பாஸ்போர்ட்டில் 58 நாடுகளுக்கு விசா தேவையில்லை! 82 ஆவது இடத்திலிருந்து 84- க்கு வீழ்ச்சி!

Published on 10/01/2020 | Edited on 10/01/2020

2020- ஆம் ஆண்டின் சக்திவாய்ந்த 100 பாஸ்போர்ட்டுகளில் இந்திய பாஸ்போர்ட்டுக்கு 84 ஆவது இடம் கிடைத்துள்ளது. முதலிடம் ஜப்பான் பாஸ்போர்ட்டுக்கு கிடைத்திருக்கிறது. அந்த நாட்டு பாஸ்போர்ட் இருந்தால், 191 நாடுகளுக்கும், சிங்கப்பூர் பாஸ்போர்ட் இருந்தால் 190, ஜெர்மனி, தென்கொரியா பாஸ்போர்ட் இருந்தால் தலா 189 நாடுகளுக்கும் செல்ல முடியும்.


இந்திய பாஸ்போர்ட் இருந்தால் பூடான், கம்போடியா, இந்தோனேஷியா, மகாவோ, மாலத்தீவு, மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து, கென்யா, மொரிஷியஸ், சிசெல்ஸ், ஜிம்பாப்வே, உகாண்டா, ஈரான், கத்தார் உள்ளிட்ட 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும். ஆனால், இவற்றில் சில நாடுகளுக்கு சென்றவுடன் விசா வாங்க வேண்டியது அவசியமாகும்.

india passport visa information bjp party jnu student

பின்லாந்து, இத்தாலி பாஸ்போர்ட் இருந்தால் 188, டென்மார்க், லக்ஸம்பெர்க், ஸ்பெயின் பாஸ்போர்ட்டுக்கு 187, பிரான்ஸ், ஸ்வீடன் பாஸ்போர்ட்டுக்கு 186.
 

ஆஸ்திரியா, அயர்லாந்து, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்விட்சர்லாந்து பாஸ்போர்ட்டுக்கு 185, பெல்ஜியம், கிரீஸ், நார்வே, பிரிட்டன், அமெரிக்கா பாஸ்போர்ட்டுக்கு 184, ஆஸ்திரேலியா, கனடா, செக் குடியரசு, மால்டா, நியூஸிலாந்து பாஸ்போர்ட்டுக்கு 183, ஹங்கேரி, லிதுவேனியா, ஸ்லோவாகியா பாஸ்போர்ட்டுக்கு 181 நாடுகளுக்கு விசா தேவையில்லை.
 

இந்திய பாஸ்போர்ட்டைக் காட்டிலும் சீனா பாஸ்போர்ட் சக்தி வாய்ந்தது. அந்த பாஸ்போர்ட்டை 71 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயன்படுத்தலாம்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

முடிவுக்கு வந்த போர் நிறுத்தம்; மீண்டும் தொடங்கிய தாக்குதல்

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

The ceasefire ended; The attack resumed

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்தும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

 

இந்த நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த நவ. 29 ஆம் தேதி தொடங்கிய தற்காலிக போர் நிறுத்தம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், தற்போது மீண்டும் போர் துவங்கியுள்ளது. போர் விமானங்கள் மூலம் காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக் குழுவின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தற்போது மீண்டும் காசா மீது தாக்குதலை தொடங்கியுள்ளது இஸ்ரேல்.

 

 

 

Next Story

கனடாவில் இருந்து இந்தியா வர மீண்டும் விசா சேவை

Published on 26/10/2023 | Edited on 26/10/2023

 

Return visa service from Canada to India

 

கனடாவுக்கும், இந்தியாவுக்கும் கடந்த சில காலங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஜூன் 18ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். கனடா நாட்டு குடிமகனாக இருந்த நிஜாரின் படுகொலைக்கு இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.

 

அவரது குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் அதிகரித்து வந்தது. அந்த நிலையில், கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை கனடாவை விட்டு வெளியேறுமாறு கனடா வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியாவில் உள்ள கனடா தூதரக உயர் அதிகாரியை வெளியேறுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.

 

மேலும், கனடாவில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், இனவெறி தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாகவும் இந்தியா எச்சரித்தது. இதனிடையே, கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி கனடாவுக்கான விசா சேவையை இந்தியா நிறுத்தியது. மேலும், கனடாவில் உள்ள இந்திய தூதரகம் விசா வழங்கும் சேவைகளை மறு அறிவிப்பு வரும் நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசு தெரிவித்திருந்தது. 

 

இந்த நிலையில், கனடாவுடனான உறவில் விரிசல் சரியாகும் நிலையில், கனடாவில் இருந்து இந்தியா வர இன்று (26-10-23) முதல் மீண்டும்  விசா சேவையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம், கனடாவில் இருந்து தொழில், மருத்துவம் உள்ளிட்ட காரணங்களுக்காக பயணிகள் இந்தியாவுக்கு வர வழிவகை செய்யப்பட்டுள்ளது.