Skip to main content

மத்திய அமைச்சர் கைது! 

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

Arrested Union Minister!

 

தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்திற்கு இந்த வருடத்தின் இறுதியில் தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், தெலங்கானாவில் பாரத் ராஷ்டிர சமிதி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே மும்முனை போட்டி நிலவிவருகிறது. 

 

கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி கட்சியே கடந்த இரண்டு முறையும் சட்டமன்றத் தேர்தலில் வென்று தொடர்ந்து ஆட்சியை நடத்தி வருகிறது. இந்நிலையில், 2023ம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியே ஆட்சியை பிடிக்கும் என சொல்லப்படுகிறது. 

 

அதேசமயம், ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸும், பாஜகவும் தீவிரமாக செயல்பட்டுவருகிறது. பா.ஜ.க. சார்பில், அம்மாநில பா.ஜ.க. தலைவராக சமீபத்தில் மத்திய அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் தற்போது தெலங்கானாவில் பா.ஜ.க. செயல்பட்டுவருகிறது. இந்நிலையில், ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சியை கண்டித்து 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை பா.ஜ.க. தலைவரும், மத்திய அமைச்சருமான ஜி.கிஷன் ரெட்டி அறிவித்தார். அதன்படி நேற்று ஹைதராபாத் இந்திரா பார்க்கில் போராட்டம் நடைபெற்றது. ஆனால், போலீஸ் அனுமதித்த நேரத்தையும் கடந்த கிஷன் ரெட்டி போராட்டத்தை தொடர்ந்ததால், அங்கு அதிகளவிலான போலீஸார் குவிக்கப்பட்டனர். அதேபோல், அந்த இடத்தில் அதிகமான பா.ஜ.க.வினர் குவிந்தனர். இதன் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

 

Arrested Union Minister!

 

இந்நிலையில், தெலங்கானா போலீஸார் அனுமதித்த நேரத்தைக் கடந்து பா.ஜ.க. தலைவரும், மத்திய அமைச்சருமான ஜி.கிஷன் ரெட்டியிடம் போராட்டத்தை முடிக்கும்படி கூறியது. ஆனால், அவர் தொடர்ந்து ஹைதராபாத் இந்திரா பார்க்கில் போராட்டம் நடத்தியதால் அவரை தெலங்கானா போலீஸ் நேற்று இரவு கைது செய்தது. பிறகு அவரை விடுவித்தது. 

 

இந்தக் கைது குறித்து மத்திய அமைச்சரும், தெலங்கானா பா.ஜ.க. தலைவருமான ஜி.கிஷன் ரெட்டி தனது எக்ஸ் சமூகவலைத்தளப்பக்கத்தில், “எங்களின் கைது கே.சி.ஆர்.-ன் தோல்வி. தெலுங்கானா மக்களின் உரிமைக்காக போராட்டம் தொடரும். கொடுங்கோல் ஆட்சிக்கு எதிரான பா.ஜ.க.வின் அமைதியான போராட்டத்தை சீர்குலைக்கவும், வேலையற்ற இளைஞர்களின் கவலைகளை கவனிக்காமல் புறக்கணிக்கவும் கே.சி.ஆர். அரசால் முடியாது” என்று பதிவிட்டுள்ளார். 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

மிக்ஜாம் புயல் பாதிப்பு - பிரதமர் மோடி ஆறுதல்

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

 Migjam storm damage- Prime Minister Modi consoles

 

மிக்ஜாம் புயல் காரணமாக மூன்றாவது நாளாக பெய்த மழைநீர் இன்றும் சென்னையில் சில இடங்களில் தேங்கி நிற்கிறது. குறிப்பாக அசோக் நகர், அரும்பாக்கம், வேளச்சேரி, பெருங்குடி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள நீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பல இடங்களில் பால் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 450 பேர் 18 குழுக்களாக பிரிந்து பல்வேறு இடங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு மற்றும் ஆந்திர மக்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், 'மிக்ஜாம் சூறாவளியால், குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். இந்தப் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பேரிடர் மீட்புப்படையினர் அயராது உழைத்து வருகின்றனர். நிலைமை முழுமையாக சீராகும் வரை தங்கள் பணி தொடரும்' என தெரிவித்துள்ளார்.

 

ஏற்கனவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இடைக்கால நிவாரணமாக 5060 கோடி ரூபாய் நிதி கேட்டு பிரதமர் கடித்தும் எழுதியுள்ளதும், 'புயல் பாதிப்புகளில் இருந்து இன்னும் சென்னை மீளாத நிலையில், ஒன்றிய அரசின் உயர்கல்வித்துறை நடத்தும் யூஜிசி - நெட் தேர்வுகள் பல மையங்களில் நடக்கிறது. தேர்வு தேதியை மாற்றி சென்னை மாணவர்களுக்கு நியாயம் வழங்குங்கள்' என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடசன் வலியுறுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

டிசம்பர் 7இல் தெலங்கானா முதல்வர் பதவியேற்பு!

Published on 05/12/2023 | Edited on 05/12/2023

 

Telangana Chief Minister sworn in on December 7

 

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல்கள் நடந்து முடிந்தன. இதனையடுத்து மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3 ஆம் தேதி நடைபெற்றது. மிசோரத்திற்கு மட்டும் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

 

இந்த சூழலில் தெலங்கானாவில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸ் 64 இடங்களையும், பிஆர்எஸ் 39 இடங்களையும், பாஜக 8 இடங்களையும், ஏஐஎம்ஐஎம் கட்சி 7 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

 

இந்நிலையில் தெலங்கானா மாநில முதலமைச்சராக, தெலங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரேவந்த் ரெட்டி பதவியேற்பார் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார். இவர் டிசம்பர் 7 ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இவருக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். முதல் முறையாகத் தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்