Published on 28/02/2022 | Edited on 28/02/2022
கரோனா பரவல் காரணமாக இந்தியா, கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச வர்த்தக விமான போக்குவரத்திற்கு தடை விதித்தது. அதனைத் தொடர்ந்து இத்தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை சர்வதேச வர்த்தக விமான போக்குவரத்திற்கான தடையை நீட்டித்து மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை இயக்குநர் ஜெனரல் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதேநேரத்தில் சிவில் விமான போக்குவரத்துத்துறை இயக்குநர் ஜெனரலால் அனுமதிக்கப்பட்ட நாடுகளுக்கும், இந்தியாவுடன் ஏர் பபுள் ஒப்பந்தம் செய்துகொண்ட நாடுகளுக்கும் இத்தடை பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சர்வதேச வர்த்தக விமான போக்குவரத்திற்கான தடை கடந்த 23 மாதங்களாக அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.