ghj

Advertisment

இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. அதேபோன்று கேரளாவில் கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில், தற்போது கணிசமான அளவு உயர்ந்து வருகின்றது.

நேற்று மட்டும் கேரளாவில் 1310 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 48 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 52 பேர் வெளிமாநிலங்களிலிருந்தும் கேரளா வந்தவர்கள். 1,162 பேருக்கு தொடர்புகள் மூலம் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இன்று மேலும் நான்கு பேர் கரோனா தொற்றால் உயிரிழந்ததையடுத்து, அம்மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொத்தமாக 74 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 641 பேர் கரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமானவர்களின் எண்ணிக்கை 11,369 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,999 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை . 10,172 ஆக உள்ளது.