Published on 25/03/2020 | Edited on 25/03/2020
![india corona virus union health ministry](http://image.nakkheeran.in/cdn/farfuture/b99lYoN5_3Kd5s5pP7vN0wrlrsLrtbNz_uAcOneJE-o/1585110814/sites/default/files/inline-images/corona666.jpg)
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 536லிருந்து 562 ஆக அதிகரித்துள்ளது. இதில் இந்தியர்கள் 519 பேருக்கும், வெளிநாட்டினர் 43 பேருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கை 11 பேர் ஆக உயர்ந்துள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.