Skip to main content

குஜராத் கலவர வழக்கு; முன்னாள் அமைச்சர் உட்பட 67 பேரை விடுதலை செய்த நீதிமன்றம்!

Published on 21/04/2023 | Edited on 21/04/2023

 

gujarat godhra rail incident related another incident court judgement 

 

கடந்த 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி, குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரத்தின் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த கரசேவகர்கள் 1700 பேர் அயோத்திக்கு ஆன்மீக பயணம் சென்றுவிட்டு மீண்டும் அங்கிருந்து அகமதாபாத் திரும்பி வந்து கொண்டு இருக்கும் போது, அவர்கள் பயணம் செய்துகொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலானது குஜராத் மாநிலம் கோத்ரா ஸ்டேஷனுக்கு வந்து நின்றபோது கரசேவகர்கள் இருந்த ரயில் பெட்டி அருகே சிலர் கூட்டமாக நின்று கோஷம் எழுப்பியபடி இருந்தபோது கரசேவகர்கள் பயணித்த எஸ்6 பெட்டியில் திடீரென நெருப்பு பற்றி எரியத் தொடங்கியது. தீ வேகமாக அடுத்தடுத்த பெட்டிகளிலும் பற்றி எரியத் தொடங்கியது. இந்த நெருப்பில் சிக்கிக் கொண்ட பொதுமக்களும், கரசேவகர்களும் வெளியே வரமுடியாமல் அலறித் துடித்தார்கள். இந்த சம்பவத்தில் 14 குழந்தைகள், 27 பெண்கள் என மொத்தம் 59 பேர் பலியானார்கள். இதனைத் தொடர்ந்து குஜராத்தில் கலவரம் ஏற்பட்டது.

 

இந்த கலவரத்துக்கு மறுநாள் வடக்கு அகமதாபாத்தில் உள்ள நரோதா பாட்டியா கிராமத்தில்  வசித்து வந்த 11 இஸ்லாமியர்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். நரோதா பாட்டியா வழக்கில், பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் அங்கம் வகித்த மாயா கோட்னானி, பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட 86 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கானது அகமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கு நிலுவையில் இருக்கும் போதே 18 பேர் இறந்துவிட்டனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவர் ஏற்கனவே நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில் நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 67 பேரையும் விடுதலை செய்து அஹமதாபாத் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நிர்மலா தேவி வழக்கு; தண்டனை விவரம் இன்று அறிவிப்பு!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Nirmala Devi case; Punishment details announced today

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றச் சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். மேலும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமியும் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, அப்போது சிபிசிஐடி எஸ்.பி.யாக இருந்த ராஜேஸ்வரி தலைமையில் 9 தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர். நிர்மலாதேவி உள்ளிட்ட மூவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பிறகு ஜாமீனில் வெளிவந்தனர்.

இந்த விவகாரம் குறித்து அன்றைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர். சந்தானமும் விசாரணை நடத்தினார். அதே சமயம் இந்த வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் தொடர்ந்து விசாரணை நடத்தியது. இதற்கிடையே பெண் டிஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டுமென்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் புரட்சிகர மாணவர்கள் இளைஞர் முன்னணி இயக்கத்தின் (DYFI) மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் என்பவர் தொடர்ந்த வழக்கில், ‘உதவிப் பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மாணவிகள், புகாரளிக்கும் விசாகா கமிட்டிக்கு ஏன் அனுப்பவில்லை? ஆறு ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?’ என்று காமராஜர் பல்கலைக்கழகத்திடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ‘ஜூன் 7ஆம் தேதிக்குள் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி விளக்கமளிக்க வேண்டும்.’ என்றும் உத்தரவிட்டது. தமிழக அரசுத் தரப்பில்  ‘நிர்மலா தேவி வழக்கில் கீழமை நீதிமன்றம் ஏப்ரல் 26 ஆம் தேதி தீர்ப்பளிக்கவுள்ளது’எனத் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தீர்ப்பு நாளான கடந்த 26 ஆம் தேதி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். ஆனால் அன்றைய தினம் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அப்போது, ‘உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி ஆஜராக முடியவில்லை’ என்று அவரது தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி பகவதி அம்மாள், “நிர்மலா தேவி 29 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும். அன்றைய தினம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார். 

Nirmala Devi case; Punishment details announced today

இதனையடுத்து இந்த வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் நேற்று (29.04.2024) தீர்ப்பு வழங்கியது. இதற்காக நிர்மலா தேவி, கருப்பசாமி, முருகன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பகவதி அம்மாள், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2ஆவது மற்றும் 3ஆவது நபர்களான முருகன் மற்றும் கருப்பசாமி ஆகிய இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் குற்றம்சாட்டப்பட்ட முதல் நபரான பேராசிரியை நிர்மலா தேவியை குற்றவாளி என அறிவித்து அவருக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என நீதிபதி தீர்ப்பளித்தார். அப்போது தீர்ப்பின் விவரங்களை வழங்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் வாதிட்டார். அதற்கு பிற்பகல் 2.30 மணிக்கு மேல் தீர்ப்பு குறித்து அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார். இருப்பினும் தீர்ப்பின் விவரம் நேற்று அறிவிக்கப்படவிலை. இந்நிலையில் நிர்மலா தேவிக்கான தண்டனை விவரங்கள் இன்று (30.04.2024) அறிவிக்கப்பட உள்ளது. 

Next Story

கடலில் சிக்கும் போதைப்பொருட்கள்; மீண்டும் மீண்டும் குஜராத்தில் பரபரப்பு 

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
narcotics at sea; Repeated agitation in Gujarat

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குஜராத்தின் அகமதாபாத்தில், நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இதன் மதிப்பு சுமார் ரூ.300 கோடி எனப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக 7 பேர் கைதாகியுள்ளனர். நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

முன்னதாக குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், இதே போன்று கடந்த மார்ச் மாதம் 12ஆம் தேதி  சுமார் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

நேற்று குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே 602 கோடி ரூபாய் மதிப்புள்ள 86 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இதுவரை 14 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். இந்நிலையில் குஜராத் கடல் பகுதியில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய கடலோர காவல் படை மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து அந்தப் பகுதியில் சோதனை நடத்தியதில் 173 கிலோ போதைப் பொருள் சிக்கியது. இந்திய மீன்பிடிப் படகில் இருந்த இரண்டு பேரை இது தொடர்பாக கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இப்படி தொடர்ச்சியாக குஜராத்தில் அதிகப்படியான போதைப் பொருட்கள் பிடிக்கப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.