Published on 09/10/2022 | Edited on 09/10/2022

அண்மை காலங்களாகவே உணவு டெலிவரி நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் தாக்கப்படுவது, மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுவது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அண்மையில் கோவையில் கூட உணவு டெலிவரி செய்பவரை போலீசார் தாக்கிய சம்பவம் வைரலாக பேசப்பட்டது.
இந்நிலையில் உணவு டெலிவரி செய்தவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற நிகழ்வு டெல்லியில் நிகழ்ந்துள்ளது. கடும் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் கச்சிதமான நேரத்தில் உணவு டெலிவரி செய்ய வந்த டொமேட்டோ ஊழியர் ஒருவரை, உணவு ஆர்டர் செய்தவர் ஆரத்தி எடுத்து பொட்டு வைத்து வரவேற்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.