Skip to main content

பிரிந்த காதலர்களை சேர்த்து வைப்பதாக கூறி போலி இணையதளம்... பல லட்சங்களை இழந்த இளம் பெண்!

Published on 29/01/2020 | Edited on 30/01/2020

ஆன்லைனில் மோசடி செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் கோரேகாவ் பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய காதலனுடன் சண்டை
ஏற்படவே இருவரும் பிரிந்தனர். இதனால் கடந்த சில மாதங்களாகவே அந்த பெண் வருத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண் ஆன்லைனில் பிரிந்த காதலர்களை சேர்ந்து வைக்கும் இணையதளத்தை பார்த்துள்ளார். அதில் தன்னுடைய தகவல்களையும், தன்னை காதலருடன் சேர்ந்து வைக்கவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.



இதனையடுத்து அடுத்த நாள் அந்த பெண்ணிடம் பேசிய இளைஞர் ஒருவர் நாங்கள் காதலர்களை சேர்ந்து வைக்கும் இணையதளத்தில் இருந்து பேசுவதாக கூறி அந்த இளம் பெண்ணிடம் பேசி பத்தாயிரம் பணத்தை பறித்துள்ளனர். இதையடுத்து சில நாட்களில் மீண்டும் பேசிய அந்த இளைஞர், பெரிய பூஜை செய்ய வேண்டும் என்று கூறி மீண்டு 45000 பணத்தை கேட்டுள்ளார். இளம்பெண்ணும் அவர்களுடைய வங்கி கணக்கில் அந்த பணத்தை போட்டுள்ளார். இந்நிலையில் தொடர்ந்து பணம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் வங்கி கணக்கை வைத்து அந்த இளைஞரை தற்போது கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் மராட்டியத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகளிர் உரிமைத் தொகை; சரிபார்க்க இணையதளம் தொடக்கம்

Published on 19/09/2023 | Edited on 19/09/2023

 

Women's Entitlement Amount Start the website to check

 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். திட்டத்தை மாநிலம் முழுவதும் தொடங்கி வைக்கும் அடையாளமாக 13 பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான ஏடிஎம் கார்டுகளை வழங்கினார். விழாவில் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்த பெண்கள் முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்திருந்தனர்.

 

அதே சமயம் தமிழ்நாடு அரசு மகளிரின் நல்வாழ்வுக்காக வழங்கும் மகளிர் உரிமைத் தொகையை, வங்கிகள் தங்களது நிர்வாக காரணங்களுக்காக பிடித்தம் செய்யக் கூடாது என்பது குறித்து மத்திய நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதப்படும். மகளிர் உரிமைத்தொகையில் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் அது குறித்து புகார் அளிப்பதற்கு முதல்வரின் முகவரி உதவி மைய தொலைபேசி எண் 1100  ஐ அழைத்து புகார் அளிக்கலாம். மகளிர் உரிமைத்தொகை குறித்து அளிக்கப்படும் இப்புகார்கள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். 


இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பத்தின் நிலையை பொதுமக்கள் அறிந்துகொள்ள இணையதளத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை ஆயிரம் ரூபாய் கிடைக்கப் பெறாதவர்கள் www.kmut.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் குடும்ப அட்டை எண்ணை பதிவிட்டு விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளவும், சரிபார்க்கவும் முடியும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

 


 

Next Story

ஆபாச இணையதளங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு! 

Published on 30/09/2022 | Edited on 30/09/2022

 

Central government orders to block websites!

 

67 ஆபாச இணையதளங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

 

கடந்த 2021- ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் படி, வழிகாட்டு முறைகளை மீறி செயல்படும் இணையதளங்கள் முடக்கப்படுகின்றன. பெண்களின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், ஆபாசத்தைப் பரப்பும் வகையிலும் செயல்பட்டதாக இந்த இணையதளங்களை முடக்க உத்தராகண்ட் உயர்நீதிமன்றம், கடந்த செப்டம்பர் 27- ஆம் தேதி அன்று உத்தரவு பிறப்பித்திருந்தது 

 

அதன்படி, இணைய நிறுவனங்களுக்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நேற்று (29/09/2022) உத்தரவிட்டிருந்த நிலையில், இணையதளங்கள் முடக்கப்பட்டது.