Skip to main content

சிவனுக்கு காணிக்கை துடைப்பமா ?

Published on 30/07/2018 | Edited on 30/07/2018
broom stick

 

 

 

 

கோவில்களில் கடவுள் சிலைகளுக்கு பூ, பால், பணம், என்று வித விதமாக காணிக்கைகள் படைப்பது வழக்கம். சில கோவில்களில் இதுபோன்று அல்லாமல் வித்தியாசமான பொருட்களும் படைக்கின்றனர்.

 

உத்திரப்பிரேதசம் மாநிலத்தில் சவாண் மாதத்தின் முதல் திங்கள் சிவனை விமர்சையாக வழிபடுவது வழக்கம், சவாண் மாதத்தின் முதல் திங்களான இன்று சாம்பல் மாவட்டத்தில் உள்ள பாடலேஸ்வர் கோவிலில் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சிவனுக்கு துடைப்பத்தை  காணிக்கையாக கொடுத்து பூஜை செய்கின்றனர். 

 

 

 

 

இதுகுறித்து உள்ளூர் பக்தர்கள் தெரிவிக்கையில்," இவ்வாறு பூஜை செய்வதால் தோல் நோய் போன்ற பல நோய்கள்  குணமாகும்" என்கின்றனர்.    

 

சார்ந்த செய்திகள்