Skip to main content

"இது விவசாயிகளுக்கு ஆதரவான குரல்""-சீக்கிய  குரு தற்கொலை!

Published on 17/12/2020 | Edited on 17/12/2020
baba ram singh

 

 

மத்திய அரசின் வேளாண் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில், விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசுக்கும், விவசாயிகளும் இன்னும் சுமூக முடிவு எட்டப்படாததால் 22 வது நாளாக போராட்டம் தொடர்கிறது.

 

இந்தநிலையில், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சீக்கிய மதகுரு பாபா ராம் சிங், விவசாயிகளின் போராட்டதிற்கு ஆதரவாக தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன் அவர் எழுதிய குறிப்பில், விவசாயிகளுக்கு அரசு நீதி வழங்காதது கொடுமையாகும் என கூறியுள்ளார். மேலும், தனது தற்கொலை, விவசாயிகளுக்கு ஆதரவான, கொடுமைக்கு எதிரான குரல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இதுகுறித்து அவர் தனது இறுதி குறிப்பில்,“விவசாயிகள் வேதனையில் உள்ளனர். அவர்கள் தங்கள் உரிமைகளுக்காக சாலைகளில் போராடுகின்றனர். இது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. அரசாங்கம் நீதி வழங்கமால் இருப்பது கொடுமை. துன்புறுத்தலை சகித்துக்கொள்வது பாவம், ஒடுக்கி வைத்தால் என்பதும் பாவம். சிலர் கொடுமைகளுக்கு எதிராகவும், விவசாயிகளின் உரிமைகளுக்காகவும் நின்றனர். அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க தங்கள் விருதுகளை திரும்ப அளித்தனர். நான் அரசாங்கத்தின் கொடுமைக்கு எதிராக தற்கொலை செய்து கொள்கிறேன். இது கொடுமைக்கு எதிரான மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவான குரல்" என கூறியுள்ளார்.

 

பாபா ராம் சிங் மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பிடிவாதத்தை விட்டுவிட்டு, உடனடியாக வேளாண் சட்டங்களை திரும்ப பெறுங்கள் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "விவசாயிகளின் அவல நிலையைக் கண்டு பாபா ராம் சிங் ஜி தற்கொலை செய்து கொண்டார். துக்ககரமான இந்த நேரத்தில் அவருக்கு என்னுடைய இரங்கலும், அஞ்சலியும்.பல விவசாயிகள் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். மோடி அரசாங்கத்தின் கொடூரம்  எல்லா எல்லைகளையும் தாண்டிவிட்டது.பிடிவாதத்தை விட்டுவிட்டு உடனடியாக விவசாய எதிர்ப்பு சட்டத்தை வாபஸ் பெறுங்கள்" என கூறியுள்ளார்.

 

 


 

சார்ந்த செய்திகள்