அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நாளை (27/03/2021) முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 8 கட்டங்களாக நடைபெறும் மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முதற்கட்டமாக நாளை (27/03/2021) 30 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோல், மூன்று கட்டங்களாக நடைபெறும் அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் கட்டமாக நாளை (27/03/2021) 47 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
முதற்கட்டத் தேர்தலில் அசாமில் 269 வேட்பாளர்களும், மேற்கு வங்கத்தில் 191 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் பாதுகாப்பு பணியில் துணை ராணுவப் படையினருடன் இணைந்து மாநில காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
அசாம் மாநிலத்தில் ஹெலிகாப்டர் மூலமும் வாக்குப்பதிவைக் கண்காணிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.