டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில், ஹரியானா பா.ஜ.க தலைவர் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2023ஆம் ஆண்டு டெல்லியில் இருந்து நண்பருடன் ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஹோட்டலில் இருந்த போது, ஹரியானா பா.ஜ.க தலைவர் மோகன் லால் படோலி மற்றும் பாடகர் ராக்கி மிட்டல் ஆகியோர் தன்னை கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்ததாகவும், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் பெண் ஒருவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரில், தன்னை நடிகராக ஆக்குவதற்கு உதவுவதாக வாக்குறுதியளித்து தன்னை ஏமாற்றியதாகவும், இரண்டு பேரும் தன்னை கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில், ஹரியானா பா.ஜ.க தலைவர் மோகன் லால் படோலி மற்றும் பாடகர் ராக்கி மிட்டல் ஆகியோர் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து விசாரணை நடத்தவுள்ளனர்.