விமானத்தில் பயணிக்கும்போது ஒரு ஜோசியரிடம் கைரேகை பார்த்ததாகவும், அடுத்த தேர்தலில் 350 இடங்களைப் பிடித்து சமாஜ்வாதி கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என அவர் கூறியதாகவும் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து வருகிறார்.
உத்தரப்பிரதேசத்தில் 2022 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தனது அரசியல் எதிர்காலம் குறித்து விமானப் பயணம் ஒன்றின்போது கைரேகை பார்த்தது பற்றி செய்தியாளர்களிடம் பேசினார் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் டெல்லிக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது, கைரேகை பார்க்கத் தெரிந்த ஒருவர், என் கையை பார்த்தார். “2022-ம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில், நீங்கள் கடுமையாக உழைத்தால், 350 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைப்பீர்கள்” என அவர் கூறினார். ஆனால், கூடுதலாக ஒரு இடத்தில் ஜெயிப்பது என்று நான் முடிவு செய்துள்ளேன். எனவே, 351 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். அதேபோல, சமாஜ்வாதி கட்சி ஆட்சி அமைந்த பிறகு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம்' எனத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.