Published on 11/05/2020 | Edited on 11/05/2020
உலகம் முழுவதும் நேற்று (10.05.2020) அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. அம்மாக்களின் முக்கியதுவத்தை உணர்த்தும் வகையிலும், அவர்களுக்கு நன்றி சொல்லும் வகையிலும் உலகம் முழுவதும் பலர் வாழ்த்து செய்திகளைச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். திரை பிரபலங்களான மாதவன், விவேக், சிவகார்த்திகேயன், சூரி, அருண்விஜய், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், தமன்னா, அஞ்சலி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஹன்சிகா மௌத்வானி, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலரும் தங்கள் அம்மாவுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அன்னையர் தின வாழ்த்து தெரிவித்தனர்.