Skip to main content

‘அழகா சிரிச்ச முகமே...’ வதந்திக்கு முற்றுப்புள்ளி; வெளியான விக்கி - நயன் புகைப்படங்கள் 

Published on 21/07/2022 | Edited on 25/07/2022

 

கடந்த 6 ஆண்டுகளுக்கு மேல் காதலித்து வந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடிக்கு கடந்த 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் பிரமாண்டமாகத் திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சரத்குமார், சூர்யா, ஷாருக்கான்  உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

 

இதனிடையே நயன்தாரா திருமணத்தை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் ஒளிபரப்புவதாக கூறி ரூ.25 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. மேலும் அதை இயக்கும் பொறுப்பை கெளதம் மேனனிடம் கொடுக்கப்பட்டது. அதனால் திருமணத்தில் யாரும் புகைப்படம் எடுக்கக்கூடாது என ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. 

 

இந்நிலையில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் புகைப்படங்களை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அத்துடன் அவர்களது திருமண வீடியோ விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளது. நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தை ஒளிபரப்புவதாக கூறிய ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியான தற்போது இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கவின் படத்தில் நயன்தாரா!

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
Nayanthara in Kavin movie

லிப்ட், டாடா, ஸ்டார் என அடுத்தடுத்து படங்களில் நடித்து வளர்ந்து வரும் ஹீரோவாக வலம் வருகிறார் கவின். இதில் ஸ்டார் படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இப்படத்தை அடுத்து இயக்குநர் நெல்சன் தயாரிப்பில் ‘ப்ளடி பெக்கர்’ (Bloody Beggar) என்ற தலைப்பில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் ‘மாஸ்க்; படத்தில் கவினோடு இணைந்து ஆன்ரியா, பாலசரவணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அறிமுக இயக்குநர் வி.கர்ணன் அசோக் இயக்கும் இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். வெற்றிமாறன் தனது கிராஸ் ரூட் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடும்  இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கவின் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநரான விஷ்ணு எடவன் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் கவின் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.  லியோ படத்தை தயாரித்த 7 ஸ்கீரின் ஸ்டூடியோ தயாரிக்கும் இப்படத்தில், நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

ஆன்மீக பயணத்தில்  விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி 

Published on 14/05/2024 | Edited on 14/05/2024
Vignesh Sivan - Nayanthara couple on spiritual journey

விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி, 2022ஆம் ஆண்டு ஜூனில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வாடகை தாய் மூலம் உயிர், உலக் என்ற இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அழகு சாதன பொருட்கள் விற்கும் '9 ஸ்கின்' (9 Skin) என்ற நிறுவனத்தை தொடங்கினார்கள். இதனைத் தொடர்ந்து, ஃபெமி 9 (Femi 9) என்ற சானிட்டரி நாப்கின் பொருளையும் அறிமுகப்படுத்தினர்.

இதனிடையே தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை தங்களது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் அன்னையர் தினத்தன்று நயன் தாரா வெளியிட்ட வீடியோ வைரலானது. இந்த நிலையில் இருவரும் கன்னியாகுமரியில் உள்ள பிரபல கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர். 

முதலில் நேற்று சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்குச் சென்று வழிபட்ட அவர்கள், அடுத்து நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்பு சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டசாமி கோவில் மற்றும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.