Skip to main content

இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டமன்றம்... நம்பிக்கையில்லா தீர்மானத்துடன் இவையும் நடக்கப்போகிறது!!!

Published on 27/06/2019 | Edited on 28/06/2019

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்துபிறகு, முதன்முதலாக நாளை சட்டமன்றம் கூட இருக்கிறது. கடந்த 24ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் சட்டமன்றத்தை 23 நாட்கள் நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது. 

இந்த 23 நாட்களில் என்னென்ன நடக்கவிருக்கிறது...
 

tamilnadu legislative assembly


ஜூன் 28 - மறந்த சட்டமன்ற உறுப்பினர்கள் (ஆர். கனகராஜ், கு.இராதாமணி) குறித்த இரங்கற் குறிப்புகள் மற்றும் இரங்கற் தீர்மானங்கள்

29 & 30 - அரசு விடுமுறை
 

கீழ்கண்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும்

ஜூலை 1 - வனம் மற்றும் சுற்றுச்சூழல் 

ஜூலை 2 -பள்ளிக்கல்வித் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, உயர்கல்வித்துறை

ஜூலை 3 - கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு

ஜூலை 4 -எரிசக்தித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை

ஜூலை 5 - மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை, பால்வளம்

ஜூலை 6 & 7 - அரசு விடுமுறை

ஜூலை 8 -நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை, 

ஜூலை 9 -நீதி நிர்வாகம், சிறைச்சாலைகள், சட்டத் துறை

ஜூலை 10 -சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்ட துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, பிறப்டுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை

ஜூலை 11 -தொழில் துறை, குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

ஜூலை 12- கைத்தறி மற்றும் துணிநூல், செய்து மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு

ஜூலை 13 & 14 -அரசு விடுமுறை

ஜூலை 15 -நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டிடங்கள், பாசனம்

ஜூலை 16 -மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை

ஜூலை 17 -வேளாண்மைத் துறை

ஜூலை 18 -சுற்றுலா - கலை மற்றும் பண்பாடு, இந்து சமய அறநிலையத்துறை 

ஜூலை 19 -வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர்தணிப்பு

ஜூலை 20 & 21 -அரசு விடுமுறை


ஜூலை 22 -காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் (அடுத்த நாளும் தொடரும்)

ஜூலை 23 -காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்த பதிலுரை, வணிக வரிகள், முத்திரைத்தாள் மற்றும் பத்திரப் பதிவு, தகவல் தொழில்நுட்பவியல் துறை

ஜூலை 24 -தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, தமிழ் வளர்ச்சி

ஜூலை 25 -இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள் - நிர்வாகம், போக்குவரத்துத் துறை

ஜூலை 26 -ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கதர், கிராமத் தொழில்கள் மற்றும் கைவினைப் பொருட்கள்

ஜூலை 27 & 28 -அரசு விடுமுறை

ஜூலை 29 -பொதுத்துறை, மாநிலச் சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, ஓய்வூதியங்கள் ஏனைய ஓய்வுகால நன்மைகளும் (அடுத்த நாளும் தொடரும்)

ஜூலை 30 -பொதுத்துறை, மாநிலச் சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, ஓய்வூதியங்கள் ஏனைய ஓய்வுகால நன்மைகளும் குறித்த பதிலுரை. மேலும் அரசினர் சட்ட முன்வடிவுகள் - ஆய்வுசெய்தலும், நிறைவேற்றுதலும், ஏனைய அரசினர் அலுவல்கள் 


இந்த அடிப்படையில்தான் சட்டமன்றம் நடைபெறும். இதற்கிடையில் ஒத்திவைப்பு, வெளிநடப்பு போன்ற அவை நடவடிக்கைகளும் நடைபெறும். மேலும் ஜூலை 1ம் தேதி  சபாநாயகர் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று(28.06.2019) நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வாபஸ் பெறுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.