காற்று வெளியிடை என்ற படத்தில் வரும் காட்சியைப் போலவே அபிநந்தனும் பாகிஸ்தான் பகுதியில் பிடிபட்டிருக்கிறார். இதில் சோகம் என்னவென்றால் அந்தப் படத்தில் கதாநாயகன் கார்த்தி பாகிஸ்தான் பக்கம் சிக்கியபிறகு, நடக்கும் காட்சிகள் அமைப்பதற்கு உதவியாக தகவல் சொன்னவர் அபிநந்தனின் அப்பா ஏர் மார்ஷல் வர்தமான்.
பாகிஸ்தானிடம் சிக்கினால் அங்கு என்னமாதிரி ட்ரீட்மெண்ட் கிடைக்கும் என்பதை வர்தமான் மூலமாக அறிந்தே படக்காட்சிகளை அமைத்ததாக டைரக்டர் மணிரத்னம் கூறியிருக்கிறார்.
ஜெண்ட்ல்மேன் ஆன வர்தமான் விமானப்படை சேவைக்காக மூன்று விருதுகளை பெற்றிருக்கிறார். அபிநந்தன் பிடிபட்டவுடன் அவரை சந்திக்க மீடியா ஆட்கள் அவருடைய வீட்டுக்கு படையெடுத்தார்கள். ஆனால், அவர்களை சந்திக்க அவர் விரும்பவில்லை.
காற்றுவெளியிடை படத்தில் வரும் காட்சியைப் போலவே நிஜத்தில் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியிருப்பது வேதனையை அளிக்கிறது.