Skip to main content

குழந்தையாக மாறும் உளவாளி...

Published on 18/05/2018 | Edited on 18/05/2018
richebourg

 

நாம் ஸ்பை கிட்ஸ் படம் பார்த்திருப்போம். ஆனால் ஒரு உளவாளியே குழந்தையாக இருப்பதை யாரும் கண்டிருக்கமாட்டார்கள். இவர்  கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார். உலகின் மிகச்சிறிய துப்பறிவாளன்தான் இவர். ஆம் இவரின் மொத்த உயரமே 58 சென்டி மீட்டர்தான் அதாவது 1.90 அடிதான். அவர் பெயர் ரிச்புர்க். எங்கும் நுழைந்துவிடுவார். யாராவது சந்தேகப்பட்டால் குழந்தையாய் மாறிவிடுவார். ஆம் அதற்கு அவரது உயரம் அவருக்கு உதவியாய் இருந்ததால் குழந்தையைபோல் சமாளித்து வெளியே வந்துவிடுவார். 1789 முதல் 1799 வரை நடைபெற்ற பிரஞ்சு புரட்சியின்போது பிரபுக்களால் இவர் உளவாளியாக நியமிக்கப்பட்டார்.

 

 

 

செய்திகளை பாரிஸுக்குள்ளும், வெளியிலும் பரிமாற்றுவதுதான் இவரின் பிரதான வேலையாக இருந்தது. இவர் ஒரு குழந்தையாக மாறுவேடமிட்டு, நர்ஸ் ஒருவரை அருகில் வைத்துக்கொள்வார். அவர்களை பார்க்கும் அனைவரும் இவரை ஒரு குழந்தை என்றும், அவரைப் பார்த்துக்கொள்ள ஒரு நர்ஸ் இருக்கிறார் என்றும் நினைத்துக்கொள்வர். இதனால் அவரது உளவு வேலை சிறப்பாக நடைபெற்றது. இதனாலயே அவர் ஓய்வூதியமாக ஒரு பெரும்பணத்தை பெற்றார். அந்நியர்களின்மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்த அவர் தனது கடைசி 25 வருடங்கள் வீட்டுக்குள்ளேயே இருந்தார். அவர் தனது 90வது வயதில் அவர் இறந்தார். தகவல்களை பரிமாறுவதில் நிகரற்றவராக இருந்தார்.