மத்திய அரசின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து தன்னுடைய கருத்துக்களை மூத்த அரசியல் விமர்சகர் முனைவர். ராமசுப்பிரமணியன் எடுத்துரைக்கிறார்.
INDIA கூட்டணியின் பெயரை I.N.D.I.A என்று பாஜகவும் அவர்கள் சார்ந்த ஊடகங்களும் எழுதியும் பேசியும் வருகின்றன. இந்தக் கூட்டணி கலகலத்துப் போக வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகள் அவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைவரும் ஒன்றுசேர்வார்களா என்கிற ஐயம் பாஜகவுக்கு இருந்தது. ஆனால் எதிர்க்கட்சிகளின் சிறப்பான மூன்று சந்திப்புகள் இதுவரை நடைபெற்றுள்ளன. கெஜ்ரிவால், சரத்பவார் ஆகியோர் வருவார்களா என்கிற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர்களும் வந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் செந்தில் பாலாஜி போல் பல்வேறு அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று பாஜக நினைத்தது. ஆனால் அதுபோல் எதுவும் நடக்கவில்லை. இப்போது சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்டப்போவதாக அறிவித்துள்ளனர். அங்கு என்ன நடக்கப்போகிறது என்பதே யாருக்கும் தெரியாது. பாஜக என்ன செய்யும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. அது நாட்டுக்கு நல்லதும் அல்ல. குடியரசுத் தலைவர் என்பவர் அரசியல் சார்புடையவர் அல்ல. இந்த நிலையில் முன்னாள் குடியரசுத் தலைவரை 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்துக்கான ஆய்வு கமிட்டியில் போட்டிருக்கிறார்கள்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறையில் சாத்தியமா? சமீபத்தில் நடந்த தேர்தல்களின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகளை இவர்கள் கலைத்துவிடுவார்களா? இது ஜனநாயக விரோதம். மாநிலக் கட்சிகளை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதே இப்போது பாஜகவின் திட்டம். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஆதரித்து அதிமுக எடுத்த முடிவு மிகவும் தவறானது. ஐந்து மாநில தேர்தல் வரவிருப்பதால் சிலிண்டர் விலையை இப்போது குறைத்துள்ளனர். கடந்த தேர்தல்களில் இதுதான் அவர்களை மிகவும் பாதித்தது.
இந்தியா கூட்டணியின் முக்கியத்துவத்தை குறைப்பதற்காகவே பாஜக பல்வேறு திசைதிருப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. பொது சிவில் சட்டத்தையும் இந்த சிறப்பு கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த அவர்கள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. எந்த மதத்தின் சட்டத்தை எடுத்து இவர்கள் பொதுவாக வைக்கப்போகிறார்கள்? இதுபோன்ற பல்வேறு அஸ்திரங்களை அவர்கள் கையில் வைத்துள்ளனர். இந்தியா கூட்டணியின் கூட்டங்கள் நடக்கும்போதெல்லாம் இதுபோன்ற விஷயங்களை அவர்கள் செய்வார்கள்.
முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...