கடந்த வெள்ளிக்கிழமை மாலை இந்திய குடியரசு தலைவர் மாளிகையிலிருந்து 2019ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் யாருக்கெல்லாம் தர இருக்கிறார்கள் என்ற பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த விருதுகள் இந்திய குடிமகனுக்கான உயரிய விருது என்பது குறிப்பிடத்தக்கது. பத்ம விருதுகள் மூன்று அடுக்குகளாக இருக்கிறது. முதலில் பத்ம ஸ்ரீ, இரண்டாவது பத்ம பூஷன், மூன்றாவது பத்ம விபூஷன் ஆகும்.
இந்த விருதுகள் என்னற்ற பல பொது தளங்களில் சிறப்பாக விளங்கியவர்களை தேர்தெடுத்து வழங்கப்படுகிறது. சமூக பணி, பொது விவகாரம், அறிவியல், பொறியியல், வணிகம், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, அரசு வேலை என்று பல்வேறு தளங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை இந்த விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டு பின்னர், விருது வழங்கும் குழுவால் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் பத்ம ஸ்ரீ, எந்த துறையிலும் புகழ்பெற்ற சேவைக்காக வழங்கப்படுகிறது. பத்ம பூஷன், உயரிய பதவியில் தனித்துவமான சேவைக்காக வழங்கப்படுகிறது. பத்ம விபூஷன், விதிவிலக்கற்ற புகழ்பெற்ற சேவைக்காக வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பட்டியல் வருடா வருடம் குடியரசு தினம் அன்று வெளியிடப்படுகிறது.
இந்த விருதுகளை வருடா வருடம் இந்திய ஜனாதிபதி ராஷ்ட்ரபதி பவனில் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் விருது வழங்குகிறார். இந்த வருடம் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 112 பேருக்கு பத்ம விருதுகளை வழங்க இருக்கிறார். அந்த 112 விருதில் ஒரு விருதை மட்டும் இருவர் பகிர்ந்து கொள்கின்றனர்(இருவர் ஒரு விருதை பகிர்ந்துகொள்வதால் அது ஒரு விருதாகவே கணக்கில் எடுத்து கொள்ளப்படும்). இந்த பட்டியலில் 4 பேருக்கு பத்ம விபூஷன், 14 பேருக்கு பத்ம பூஷன், 94 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 21 பேர் பெண்கள், 11 பேர் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள், 3 பேர் மரணமடைந்தவர்கள் (அவரது மரணங்களுக்கு பின்னர் கௌரவிக்கும் விருதுகள்), ஒரு திருநங்கை ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பத்ம விபூஷன்
டீஜன் பாய் ( கலை- நாட்டுப்புற பாடகர்)
டாக்டர் டீஜன் பாய் ஒரு பண்டாவானி என்னும் இதிகாச கதைகளை எடுத்து நாட்டுப்புற பாடல் வழியில் சொல்லுவதில் வல்லமை பெற்றவர். இவர் மஹாபாராதம், மற்றும் பல இதிகாச கதைகளை பற்றி பாடுவதில் சிறந்து விளங்குபவர். 1987ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதும், 2003ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதையும் பெற்றிருக்கிறார்.
பத்ம பூஷன்
பச்சேந்திரி பால் (விளையாட்டு)
1984ஆம் ஆண்டில் மவுண்ட் எவரஸ்டை உச்சியில் ஏறி சாதணை படைத்தார். இந்த சாதணையை புரிந்த முதல் இந்திய பெண் இவர்தான். மலை ஏறுபவர்களில் அயர்ன் லேடி என்று அழைக்கப்படுகிறார். பத்ம ஸ்ரீ விருதை பெற்று 35 வருடங்கள் கழித்து தற்போது பத்ம பூஷன் விருதை பெறுகிறார்.
பத்ம ஸ்ரீ
முக்தாபென் பங்கஜ்குமார் டாக்லி மற்றும் திரௌபதி கிமிரே (சமூக பணி)
குஜராத்திலிருந்து முக்தாபென் பங்கஜ்குமார் டாக்லி மற்றும் சிக்கிமிலிருந்து திரௌபதி கிமிரே இவர்கள் இருவரும் மாற்றுத் திரனாளிகளுக்கான நல உதவிகளை செய்து வந்ததால் பத்ம ஸ்ரீ விருதை கொடுத்து கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
ராஜ்குமாரி தேவி (விவசாயம்)
பிஹாரிலுள்ள முசஃபார்பூர் என்னும் ஊரில் அனந்த்பூர் என்னும் கிராமத்தை சேர்ந்தவரான ராஜ்குமாரி தேவி, விவசாயத்தில் பெரும் சேவை செய்ததால் இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவருக்கு கிஷன் ஸ்ரீ விருதும் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிரதி தேவி (பொது விவகாரம்)
இவர் ஒரு அரசியல்வாதி, மேலும் பிஹார் சட்டமன்றத்தில் உறுப்பினராக இருக்கிறார்.
ஹரிகா துரோனவள்ளி (விளையாட்டு- சதுரங்கம்)
ஹம்பி கொனேரு என்னும் சதுரங்க வீராங்கனையை பின்பற்றி வந்தவரான இவர், ஆண்கள் கிராண்ட் மாஸ்டர் டைட்டிலை பெற்ற இரண்டாவது இந்திய பெண் ஆவார்.
கோதாவரி துட்டா (கலை- ஓவியம்)
மாதுபானி ஓவியத்தை இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வளர்க்க முக்கிய நபராக செயல்பட்டிருக்கிறார். 1980ஆண்டில் இவர் தேசிய விருதை பெற்றிருக்கிறார்.
நர்தாகி நடராஜ் (நடனம்)
54 வயதாகும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர், உயரிய விருதுகளை பெற்ற திருநங்கைகளில் இவரும் ஒருவர் ஆவார்.
ரோஹினி கோத்போலே (அறிவியல் & பொறியியல்- நியுகிளியர்)
பேராசிரியர். ரோஹினி கோத்போலே ஒரு இந்திய இயற்பியலாளர் ஆவார். பெங்களூருவிலுள்ள ஐ.ஐ.எஸ் கல்லூரியில் எனர்ஜி பிஸிக்ஸ் படிப்பில் பேராசிரியராக இருக்கிறார்.
ஃப்ரெட்ரிக் ஐரினா (வெளிநாட்டவர்- சமூக பணியாளர்)
பெர்லினில் இருந்து 1978ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுலா பயணியாக வந்தார். அப்போது உ.பியில் உள்ல மதுராவில் 1200 பசுக்களுக்கு மருத்துவம் பார்த்திருக்கிறார். பிறகு மாடுகளை பராமறிக்கும் மாட்டு கொட்டகை ஒன்று ‘சுர்பாய் கௌசேவா நிகேடன்’ என்னும் பெயரில் உருவாக்கினார்.
பாம்பேலா தேவி லாய்ஷ்ரம் (விளையாட்டு- வில்வித்தை)
கடந்த 2008ஆம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக வில்வித்தையில் கலந்துகொண்டவர்.
கிதா மேஹ்தா (வெளிநாட்டவர்- இலக்கியம் & கல்வி)
இந்திய எழுத்தாளரான இவர், ஒடிஷாவின் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் தங்கை ஆவார். இவரின் தந்தை பிஜு பட்நாயக் ஒடிஷாவின் முன்னாள் முதலமைச்சராக இருந்தவர். பத்ம விருதுக்காக இவரை தேர்ந்தெடுத்தாலும், இவர் அதை வாங்க மாட்டேன் என்று தெரிவித்திருக்கிறார்.
மதுரை சின்னப் பிள்ளை (சமூக பணி)
மதுரையிலுள்ள சின்ன கிராமத்தை சேர்ந்த இவர். மகளிர் சுய உதவி குழு ஒன்றை திறம்பட செயல்படுத்தியதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. பெண்களின் வளர்ச்சிக்காகவும், ஏழ்மையின்றி பெண்கள் சுய தொழில் செய்ய சேவை செய்து வந்துள்ளார்.
டாவ் போர்ச்சான் லின்ச் (வெளிநாட்டவர்- யோகா)
அமெரிக்காவை சேர்ந்த யோகா பயிற்சியாளர். தனக்கு எட்டு வயதாக இருக்கும்போது இந்தியாவில் இந்த யோகாவை கற்றுக்கொண்டுள்ளார்.
கமலா புஜ்ஹாரி (விவசாயம்)
ஒடிஷாவிலிருந்து வந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்ணான இவர், சுற்றுவட்டாரத்திலுள்ள நெல் வகைகளை சேமித்து வந்ததற்காகவும், இயற்கை உணவை புரோமோட் செய்ததற்காகவும் இந்த விருது வழங்கப்படுகிறது.
மிலேனா சால்வினி (வெளிநாட்டவர்- கலை- நடனம்)
இவர் கதகளி, பரதநாட்டியம், மோஹினிஆட்டம் போன்ற பல பாரம்பரிய நடன கலைகளை கற்றறிந்தவர்.
பிரஷாந்தி சிங் (விளையாட்டு- குடை பந்து)
இவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டே அர்ஜுனா விருதை வழங்கி இந்திய அரசாங்கம் கௌரவப்படுத்தியது. இந்திய பெண்கள் குடைப்பந்து அணியில் நட்சத்திர ஷூட்டராக இருக்கிறார்.
ஷரதா ஸ்ரீனிவாஸ் (தொல்லியல்)
தொல்லியல்துறையில் சிறந்து விளங்கும் இவர், கலை அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தொல்லியல் ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறார்.
சாலுமரதா திம்மக்கா (சமூக பணியாளர்)
கர்நாடகாவைச் சேர்ந்த இந்த சமூக பணியாளர், ஹுலிகுலிருந்து குதுர் நெடுஞ்சாலையில் நான்கு கிமீ ஒரு ஆலமரத்தம் என்று மொத்தம் 385 ஆலமரங்களை நட்டிருக்கிறார்.
ஜம்முனா டுடூ
பெண் டார்சான் என்று பலரால் அழைக்கப்படுகிறார். டிம்பர் மாஃபியாக்களிடம் இருந்து காடுகளை காப்பாற்றி வருவதற்காக இதற்கு முன்னரே பல விருதுகளை இவர் வாங்கி குவித்திருக்கிறார்.