Skip to main content

EXCLUSIVE: என்னை மிரட்டுகிறார்கள் -நிர்மலா தேவி!!! வாயைப் பொத்தி இழுத்துச்சென்ற காவல்துறையினர்...

Published on 30/01/2019 | Edited on 30/01/2019

 

nirmala devi

 

திருவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜராக, மதுரை மத்திய சிறையிலிருந்து நிர்மலா தேவி அழைத்துவரப்பட்டார். முதன்முதலாக நிர்மலா தேவி பத்திரிகையாளர்களிடம் பேச முற்பட்டார். பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க தொடங்கினார். 
 

அப்போது அவர், 
 

என்பேரில் வந்த வாக்குமூலம் பொய், சிபிசிஐடி காவல்துறையினர் வெள்ளைத் தாளில் மட்டுமே என்னிடம் கையெழுத்து வாங்கினார்கள். இன்னும் நிறைய விஷயங்களும், ஆதாரங்களும் இருக்கின்றன, அதையெல்லாம் வக்கீல் பசுவன் பாண்டியனிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்றார். உங்களுக்கு ஜாமீன் வழங்கப்படாமல் இருப்பதன் பின்னணியில் யாரும் இருக்கிறார்களா என கேட்டபோது இருக்கலாம் என்றும், உயர்மட்ட அதிகாரிகளின் இடையூறு இருக்கிறது என்றும் கூறினார். 
 

உங்களுக்கு மிரட்டல் இருக்கிறதா எனக்கேட்டபோது, எனக்கு மிரட்டல்கள் இருக்கின்றன எனக்கூறினார். அப்போது எஸ்கார்ட் போலிஸ் ஜெயக்கொடி என்பவர் நிர்மலாதேவியின் வாயை பொத்தினார், அதைத்தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி உள்ளிட்ட காவல்துறையினர் அவரிடம் கடுமையாக நடந்து கையைப்பிடித்து வேகமாக இழுத்து சென்றுவிட்டனர். இவையனைத்தும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைவரின் முன்னாலேயே நடந்தது. மேலும் பத்திரிகையாளர்களை உள்ளே அனுமதிக்கக்கூடாது என கடுமையாக தெரிவித்தும்விட்டனர். இதனால் வழக்கமாக பத்திரிகையாளர்களை அனுமதிக்கும் தூரம்வரைக்கூட உள்ளே அனுமதிக்கவில்லை. 
 

இன்று நிர்மலா தேவியிடம் காவல்துறை நடந்துகொண்டவிதம் மிகக்கடுமையாகவே இருந்தது. உண்மையை சொல்லக்கூடாது என்றுதானே இத்தனை நாள் வைத்திருந்தோம். அதையும் மீறி உண்மையை கூறிவிட்டாயே என்ற கோபத்தையும், காட்டத்தையும் பத்திரிகையாளர்களின் முன்னாலேயே வெளிபடுத்தினார்கள்.

 

செய்தி: சி.என்.ராமகிருஷ்ணன், அண்ணல்

புகைப்படம்: ராம் குமார்