தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து சென்னை தலைமைச் செயலகத்தின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட திமுகவினர் கைது செய்யப்பட்டனர். ஸ்டாலினுடன் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களை அழைத்துச் செல்ல 5 மாநரக பேருந்துகள் வரவழைக்கப்பட்டிருந்தன. அவர்களை மாநர பேருந்தில் ஏற்றினர். மேலும் ராயபுரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கைது செய்யப்பட்டவர்களை அடைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த போராட்டம் காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கைது செய்யப்பட்டபோது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், எந்த மக்கள் மீது குண்டு வீசி கொலை பண்ணினார்களோ அந்த குண்டை என் மீது வீசினால் கூட மனப்பூர்வமாக நெஞ்சை நிமிர்த்தி ஏற்றுக்கொள்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும். குதிரைபேர அரசும், கையாளாகாத முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், டிஜிபி ராஜேந்திரனும் பதவியில் இருந்து விலகும் வரை இந்த போராட்டம் தொடரும். தொடரும். தொடரும்.
அமைச்சர் ஜெயக்குமார் தவிர்க்க முடியாத காரணத்தினால் சுட்டோம் என்று சொல்கிறாரே.. அது சரியான போக்கா?
அவர் ஜெயக்குமார் இல்லை. பொய்க்குமார். பொய்க்குமார்.
இவ்வாறு கூறினார்.