எம்.ஜி.ஆர். - அம்மா - தீபா பேரவை என்ற இயக்கத்தை தொடங்கி நடத்தி வந்தார் ஜெ.தீபா. ஜெயலலிதாவின் அண்ணன் மகளான இவர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த பேரவையை தொடங்கினார். திடீரென பொதுவாழ்க்கையில் இருந்து முழுமையாக விலகுகிறேன் என்றும், தன்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என முகநூலில் பதிவிட்டார். இந்த நிலையில் ஜெ.தீபா ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த ஆடியோவில், என்னை சுற்றி ஏமாற்றி வந்து, என்னை தனிமைப்படுத்தி, பல துன்பங்களுக்கு ஆளாக்கி மிகப்பெரிய சூழ்ச்சியை செய்த நபர் ராஜா. ராஜாவுக்கு இங்கு அலுவலகப் பணி கொடுத்து நான் வைத்திருந்த காலத்தில் அவர் எனக்கு தெரியாமல் செய்த பலவித தவறான காரியங்களால் நான் நடத்தி வந்த பேரவைக்கும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனக்கும் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
ராஜா என்பராலும், அவரைச் சார்ந்த நபர்களாலும் எனக்கும், எனது கணவர் மாதவன் ஆகிய எங்களின் இருவரின் உயிருக்கும் ஆபத்து இருக்கிறது என்பதை ஏற்கனவே நான் தெரிவித்திருக்கிறேன். அதிகாரப்பூர்வ தகவலை காவல்துறையிடமும் கொடுக்க உள்ளேன்.
இதுபோன்ற சூழ்நிலையில் இதுபோன்ற விசயங்களை நான் வெளியிடுவதை விரும்பாத சிலர், அதனை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று அவர்கள் ஒரு ஆடியோவை அனுப்பியிருக்கிறார்கள். அதையும் கேளுங்கள். அதை கேட்டால் உங்களுக்கு முழு விவரமும் புரிந்து விளக்கமும் கிடைத்துவிடும்.
மொத்தத்தில் நான் சந்தேகப்பட்டதுபோல் இந்த பேரவையை தொடங்கிய நாள் முதல் என்னை சுற்றி பலர் சூழ்ந்துகொண்டு என்னை வஞ்சிக்கும் விதமாக என்னை ப்ளாக்மெயில் செய்து கொண்டு எனக்கும், எனது கணவருக்கும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலைகளை உருவாக்கி குறிப்பாக ராஜா ஒருமுறை எனது வீட்டுக்கு முன் ஏதோ ஒரு கூட்டம் நடக்கும் சமயம் எங்கள் இருவர் மீதும் திராவகம் வீசப்படும் என்று சொன்னதற்கு எல்லா ஆதாரம் இருக்கிறது. இதுபோல எத்தனையோ நடந்து விட்டது. அதை காவல்துறையிடம் முறையாக கொடுக்க வேண்டும் என்று காத்திருக்கிறேன்.
மேற்கொண்டு இதுபோன்ற ஆடியோ மெசேஜ்கள், நீங்கள் நினைக்கலாம் ஏன் ஆடியோ மெஜேஜ் போடுகிறீர்கள் என்று. எனக்கு வேறுவழித் தெரியவில்லை. என்னை சுற்றி நடந்துகொண்டிருக்கும் தவறான விசயங்களை எப்பாடியாவது வெளியே கொண்டுவர வேண்டும் என்பதற்காகத்தான் நானும் பதிலுக்கு இதுபோன்று ஆடியோ மெசேஜ் எல்லாம் கொடுக்க ஆரம்பித்தேன். இப்போது முழு விளக்கமாக கொடுக்கிறேன்.
நான் இப்போது அரசியலைவிட்டு விலகிவிட்டேன் என்று தெரிந்ததும் பலரும் என்னை துன்புறுத்தி, தொல்லைக் கொடுத்து இரவு பகல் என்றுக்கூட பாராமல் தூங்க விடாமல் எனக்கும், எனது கணவருக்கும் மிரட்டல்களும் அச்சறுத்தல்களையும் விடுத்து வந்தனர். அதற்குத்தான் காவல் ஆணையரிடம் புகார் தர வேண்டும் என்று அன்று ஒரு செய்தி வெளியிட்டேன்.
அதன் தொடர்ச்சியாகத்தான் இதனை வெளியிடுகிறேன். இதில் யார் யார் என்ன செய்தார்கள் என்ற ஆதாரங்கள் என்னால் கொடுக்க முடிந்தது. மொத்தத்தில் எங்களை வீழ்த்த வேண்டும் என ஒரு கூட்டு சதி நடக்கிறது. என்னை என் கணவரிடம் இருந்து பிரித்துவிட்டு எப்படியாவது என்னையும் தனிமைப்படுத்தி ஏதோ செய்ய வேண்டும் என்று சதி திட்டம் அவர்களிடம் இருக்கிறது.
நிரந்தரமாக என்னுடைய பெயரை கெடுக்க வேண்டும் என்பது அவர்களுடைய நோக்கம். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்ற அடையாளத்தையே நான் இழந்துவிட வேண்டும் என என் மேல் வீண் பழி சுமத்தி சுமத்தி கெட்ட பெயர் உருவாக்க வேண்டும், மக்களிடம் எனக்கு நல்ல பெயரோ, நல்ல எண்ணமோ இருக்கக்கூடாது என்பதுதான் இது சதி. இதை யார் செய்கிறர்கள் என்று என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. இவ்வாறு பேசியிருக்கிறார்.