Skip to main content

நடிகர் சித்தார்த்துக்கு இருக்கிற அக்கறை ஏன் ரஜினிக்கு இல்லை - டான் அசோக் பேச்சு!

Published on 18/01/2020 | Edited on 19/01/2020

துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய சில செய்திகள் சர்ச்சையாகி உள்ள நிலையில் இதுதொடர்பாக அவர் மீது காவல்துறையினரிடம் சிலர் புகார் தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில் இதுதொடர்பாக எழுத்தாளரும், திமுக ஆதரவாளரான டான் அசோக் அவர்களிடம் பல்வேறு கேள்விகளை முன் வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

xzf



துக்ளக் ஆண்டுவிழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் பத்திரிக்கையை ஒருவர் படித்தால் அவர் அறிவாளி என்றும், முரசொலி கையில் வைத்திருந்தால் அவர் திமுககாரர் என்றும் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்ற அவர் கருத்து தெரிவித்திருந்தார். திமுக-வை சார்ந்து இயங்கும் நீங்கள் இந்த கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்? 

முதலில் ரஜினியை நான் சூப்பர் ஸ்டாராக பார்க்கவில்லை. சூப்பர் சங்கியாகத்தான் பார்க்கிறேன். அதற்கு வலுவான காரணம் இருக்கிறது. தமிழ்நாடே பற்றி எரிந்த ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அவரின் நிலைபாடு என்ன? இந்தியா முழுவதும் எதிர்ப்புக்குள்ளான சிஏஏ சட்டம் பற்றி அவரின் நிலைபாடு என்ன என்று இதுவரை அவர் தெரிவித்திருக்கிறாரா? மற்ற நடிகர்களை போல் இவர் சினிமா தொழிலை மட்டும் பார்த்துக்கொண்டு இருந்தால் நாம் யாரும் அவரிடம் கருத்துக்கேட்க போவதில்லை. ஆனால் 400 ஆண்டுகளாக தான் அரசியலுக்கு வரப்போவதாக கூறிக்கொண்டு இருக்கும் அவரிடம் கருத்துக்களை எதிர்பார்ப்பது முக்கியமான ஒரு விஷயம். ஆனால், சினிமாவில் அரசியல் பேசுகிறார், தமக்கு பிடித்த நிகழ்வுகளின் போது அரசியல் பேசுகிறார். ஆனால் சினிமா விழாவில் அரசியல் பேச மாட்டார் என்கிறார், அது ஏன் என்று தெரியவில்லை. சிஏஏ-வை பற்றி ஆதரித்து கருத்து சொன்னால் தமிழகமக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், எதிர்த்து சொன்னால் மோடி என்ன செய்வாரோ என்று பயம். எனவே இப்படிபட்டவரை நான் சூப்பர் சங்கி என்றுதான் சொல்வேன். இப்படிப்பட்ட அறிவாளிகளுக்கு துக்ளக் பத்திரிகை படிப்பவர்கள் தான் அறிவாளியாக தெரிவார்கள்.

ரஜினிக்கு பிறகு பல ஆண்டுகளுக்கு பிறகு அரசியலுக்கு வந்த சித்தார்த்துக்கு சிஏஏ பற்றியும், அதனால் வரும் பாதிப்புகளை பற்றியும் தெரிந்த அளவுக்கு கூட ரஜினிக்கு தெரியவில்லை. இது பாசிசத்துக்கு ஆதரவானது, மக்களுக்கு எதிரானது என்று சித்தார்த் உள்ளிட்ட நடிகர்கள் தெருவில் இறங்கி போராடும் போது இவர் ஏன் அமைதி காக்கிறார். இவரின் அமைதி யாருக்கு ஆதரவானது என்று நம் அனைவருக்கு தெரியும். ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒவ்வொரு சம்பவத்தை பற்றியும் தனித்தனியான கருத்துக்கள் இருக்கும். அந்த மாதிரியான கருத்துக்கள் இவருக்கு ஏந் தோன்றவில்லை என்பது இதுவரை யாருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது. பணமதிப்பிழப்பு சம்பவத்தின் போது புதிய இந்தியா பிறந்தது என்று கருத்து தெரிவித்திருந்தார். அந்த இந்தியாவில் தான் இப்போது அனைவரும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறோம். நீங்கள் பிஜேபிக்கு ஜால்ரா அடிப்பதை விட அந்த கட்சியிலேயே சேர்ந்துவிட வேண்டியது தானே? அங்கேதானே தமிழ்நாடு உங்களுக்கு ஆப்பு அடிக்கின்றது. 

எனக்கு பாஜக சாயம் பூச முயற்சி மேற்கொள்கிறார்கள் என்று அந்த விழாவிலேயே ரஜினிகாந்த் வருத்தப்பட்டுள்ளாரே?

யாருங்க அவருக்கு சாயம் பூச பார்க்கிறார்கள். ஆரஞ்சு பழத்தில் யாருங்க ஆரஞ்சு பெயிண்ட் அடிக்க போறா? ஆப்பிள் பழத்தில் காவி கலர் அடிச்சா கூட சொல்லலாம், நீங்கள் ஆல்ரெடி காவி ஆரஞ்சு பழம், அப்புறம் யாரு உங்க மேல காவி கலர் அடிக்க பார்க்கிறார்கள். இவரு ஏன் பதறுகிறார் என்றால் அவர் இருப்பது தமிழ்நாடு, அதனால்தான். இதே உத்தரபிரதேசமாக இருந்தால் அவர் சூப்பர் ஸ்டாராகவும் இருக்கலாம், பாஜக ஆதரவாளராகவும் இருக்கலாம், ஆனால் தமிழ்நாட்டில் அவர் அப்படி இருக்கு முடியாது என்பதே அவருக்கு தற்போது இருக்கும் கவலை. தமிழ்நாட்டில் அப்படி ஏதாவது செய்தால் மக்கள் கேள்வி கேட்பார்களே என்ற அச்சம் ஏற்படுமே, அதற்குத்தான் அவர் தற்போது யோசிக்கிறார்கள்.