Skip to main content

'கொரோனா வைரஸ்' செய்யக் கூடாத செயல்கள் என்னென்ன - விரிவான அலசல்!

Published on 05/03/2020 | Edited on 05/03/2020


சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் கொரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே பெரும் அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன. இருந்த போதிலும் இதுவரை இந்தியாவிலும் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை இந்திய அரசாங்கம் தற்போது உறுதி செய்துள்ளது. 

சில நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் பெரிய அளவில் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் எவ்வித உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெறவில்லை. ஆனால் உலக நாடுகளில் உயிரிழப்புக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சீனாவுக்கு சிறிதும் தொடர்பில்லாத நாடுகளில் கூட கொரோனா வைரஸ் பரவுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் உலகம் முழுவதும் இதுவரை மூன்றாயிரத்துக்கும் அதிகமாக நபர்கள் பலியாகி உள்ளார்கள். 50 ஆயிரத்துக்கும் அதிகமான நபர்கள் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்பதை நாம் சற்று விரிவாக காணலாம். 

செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள்: 

1. காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

2. வெளியே சென்று வந்தால் வீட்டிற்கு வந்து கை, கால்களை கழுவ வேண்டும். 

3. உபயோகித்த டிஷ்யூ பேப்பர்களை வீட்டை விட்டு உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். 

4. இரும்பலோ, தும்மலோ வரும்போது முகத்தை மாஸ்க் கொண்டு மூட வேண்டும். 

5. தனிப்பட்ட முறையில் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருத்தல் மிக அவசியம். 

6. லிக்யூட் திரவங்களை கொண்டு கை கழுவது மிக உபயோகமாக இருக்கும். 

செய்யக் கூடாதவைகள்: 

1. இறைச்சி கூடங்களுக்கு செல்வதை அறவே தவிர்க்க வேண்டும். 

2. விலங்குகளிடம் இருந்து விலகி இருப்பது மிக நல்லது. 

3. எச்சிலை பொது இடங்களில் துப்புவதை தவிர்க்க வேண்டும்.

4. தொடர் இரும்பல், காய்ச்சில் இருப்பவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். 

5. வேக வைக்கப்படாத இறைச்சி உண்பதை தவிர்க்க வேண்டும். 

6. விலங்குகளின் பண்ணைகளுக்கும், விற்பனை செய்யும் இடங்களுக்கும் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.