சீரியஸான விஷயத்தைக் காமெடியாகச் சொல்வது ஒரு கலை. எச்.ராஜா என்னதான் கத்திப் பேசினாலும், அவருடைய கருத்தை(?) வைத்தே, மீம்ஸ் மூலம் கிச்சு கிச்சு மூட்டுவார்கள். அறிந்தே நடக்கின்ற சமாச்சாரம் இது. அறியாமல் நடந்த ஒரு விஷயத்தைப் பார்ப்போம்!
கும்பகோணத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சா.விவேகானந்தன், கும்பகோணம் மேற்கு காவல்நிலைய ஆய்வாளரிடம். எச்.ராஜா சமீபத்தில் பேசிய விஷயத்தைக் குறிப்பிட்டு, அவர் மீது புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் ஒரு இடத்தில் எச்.ராஜா ஆங்கிலத்தில் பேசியதை அப்படியே தந்திருக்கிறார். எப்படியென்றால் –Hole police is corrupt என்று எச்.ராஜா சொன்னதாகக் குறிப்பிட்டிருக்கிறார். ‘எல்லா போலீசாரும் ஊழல் பேர்வழிகள்’ என்ற பொருளில், எச்.ராஜா பயன்படுத்திய ஆங்கில வார்த்தை whole ஆகும். அதைத்தான், வழக்கறிஞர் விவேகானந்தன் hole ஆக்கிவிட்டார். Hole என்றால் தமிழில் ஓட்டை என்று பொருள். விவேகானந்தனின் புகார்படி பார்த்தால், ‘ஓட்டை போலீஸ்’ என்று அர்த்தமாகிவிடுகிறது
.
பி.எஸ்.சி., பி.எல்., படித்த வழக்கறிஞர் ஒருவர், எப்படி ‘ஓட்டை’ என்று எழுதிக் கோட்டை விட்டாரோ? எச்.ராஜா சம்பந்தப்பட்ட விஷயம் என்றாலே, அவர் மீதான புகாரும்கூட சிரிப்பை வரவழைப்பதாக உள்ளது.
‘போங்கப்பா.. பொதுநோக்கோடு ஒருவர் புகார் அளித்தால், அதிலும் ‘ஓட்டை’ காண்பதா?’ என்று இந்தச் செய்தியைப் படித்துவிட்டு முணுமுணுக்காமல், சிரித்துவிடுங்கள்.. ப்ளீஸ்!