Skip to main content

தல 60 படத்தில் வில்லன் யார் ? படக்குழு பதில்...

Published on 04/09/2019 | Edited on 04/09/2019

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அஜித், ஹெச், வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்னும் ஹிந்தி பட தமிழ் ரீமேக்கில் நடித்திருந்தார். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த படத்தை தயாரித்தார். வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இப்படம். 
 

thala 60

 

 

இதனையடுத்து அஜித்தின் 60வது படத்தையும் ஹெ.வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார். இது ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகிறது. இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் பூஜையுடன் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இப்படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அஜித் பைக் ரேஸராக நடிக்கிறார். இதற்காக அஜித் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டது. அதனை உறுதிபடுத்தும் வகையில், அஜித் மெலிந்த தோற்றத்தில் காட்சியளிக்கும் புகைப்படம் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  
 

zombi


அஜித்தின் 60வது படமான இந்த படத்தில் அவரை எதிர்த்து நடிக்கும் வில்லனாக பாலிவுட் பிரபலம் அஜய் தேவ்கன் நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

ஆனால், தற்போது இதனை படக்குழு மறுத்துள்ளது. போனி கபூர் ஹிந்தியில் மைதான் என்றொரு படத்தை தயாரிக்கிறார் இதில் அஜய் தேவ்கன் தான் ஹீரோவாக நடிக்கிறார். இதை வைத்துதான் தல 60 படத்தில் அஜய் தேவ்கன் வில்லனாக நடிக்கலாம் என்று பரப்பிவருகிறார்கள் போல. அஜித் மற்றும் ஹெச். வினோத் கூட்டணி மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றபடி யார் நடிக்கிறார்கள் என்பதை விரைவில் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று தெரிவித்துள்ளது தல 60 படக்குழு. 

 

 

சார்ந்த செய்திகள்