Skip to main content

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் - வெளியான மாஸ் தகவல்

Published on 15/05/2023 | Edited on 15/05/2023

 

vijay in venkat prabhu direction

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த் மற்றும் இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர். இப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. 

 

இந்த நிலையில் விஜய் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி லியோ படத்தை முடித்துவிட்டு விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக சமூக வலைத்தளத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. மேலும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாகவும் கூறப்படுகிறது.  

 

முன்னதாக விஜய் 68வது படத்தை அட்லீ இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து அண்மையில் தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் விஜய் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டதாக பேசப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது விஜய்யின் அடுத்த பட இயக்குநர் லிஸ்டில் வெங்கட் பிரபுவும் இணைந்துள்ளார்.  

 

வெங்கட் பிரபு நாகா சைதன்யாவை வைத்து 'கஸ்டடி' படத்தை இயக்கினார். கடந்த 12ஆம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தை சந்தித்து வருகிறது. இதை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படமும் கீச்சை சுதீப்பை வைத்து ஒரு படமும் வெங்கட் பிரபு இயக்க ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

 

 

சார்ந்த செய்திகள்